முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூரில் தீயணைப்பு நிலையம், காவல் உதவி ஆணையர் அலுவலகம்: அமைச்சர் சேகர் பாபு பார்வையிட்டு ஆய்வு

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2024      தமிழகம்
Sekar-Babu-2024-09-05

சென்னை,  கொளத்தூர், நேர்மை நகரில் தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகம் அமைக்கப்படவுள்ள இடத்தினை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்வர் ஸ்டாலினின் சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும், மக்கள் நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், உதவி ஆணையர் (குடிமைப் பொருள் வழங்கல்) ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன. 

அதனைத் தொடர்ந்து, சென்னை கொளத்தூர், நேர்மை நகரில் தீயணைப்பு நிலையம், காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகியவற்றை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை  அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர்,  கண்காணிப்பு அலுவலர் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குனர் பா. கணேசன், சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையர் (வடக்கு) கே. எஸ். நரேந்திரன் நாயர்,  சென்னை மேற்கு காவல் துறை இணை ஆணையர் டாக்டர் பி.விஜயகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார்,  இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா. சுகுமார்,  கொளத்தூர் காவல் துணை ஆணையர் ஆர்.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கீதா, மத்திய சென்னை வருவாய் கோட்டாட்சியர் முருகன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் வடசென்னை ப.பி.லோகநாதன், மண்டல இணை ஆணையர் ஜ. முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஸ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து