எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அர்வால், பீகாரில் இடதுசாரி தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பீகார் மாநிலம் அர்வால் மாவட்டம் கிஞ்சார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சக்கன் பிகா கிராமத்தை சேர்ந்த சுனில் சந்திரவன்ஷி என்பவர் இடதுசாரி கட்சியான சி.பி.ஐ (எம்.எல்.) கட்சியின் உள்ளூர் தலைவராவார். இந்நிலையில் சுனில் சந்திரவன்ஷி நேற்று முன்தினம் மாலை உள்ளூர் சந்தைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுனில் சந்திரவன்ஷியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அர்வால் எஸ்.பி. ராஜேந்திர குமார் பில் கூறுகையில், முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்வோம். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


