முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை ஆவணி மூல திருவிழா: மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Meenakshi 2024-09-10

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் நேற்று டைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூலத் திருவிழா நடைபெற்று வருகிறது. சிவபெருமானின் திருவிளையாடல்களை விளக்கும் வகையில் சிறப்பு அலங்காரம் தொடர்ந்து நடைபெறுகிறது. கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு மோட்சம், மாணிக்கம் விற்ற திருவிளையாடல், தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடல், உலவாக்கோட்டை அருளிய லீலை ஆகிய அலங்காரங்களைத் தொடர்ந்து நேற்று முன்தினம், பாணனுக்காக அங்கம் வெட்டிய திருவிளையாடல் லீலை நடைபெற்றது.

பாணனுக்காக சென்று அங்கம் வெட்டிய திருவிளையாடல் அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்து கோவில் பட்டர் கையில் கேடயம், வாளுடன் இந்த திருவிளையாடலை நடித்து காண்பித்தார். இரவில் சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து