முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

75 ஆண்டுகள் கழித்தும் தி.மு.க. கம்பீரமாக காட்சியளிக்கிறது: முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      தமிழகம்      அரசியல்
CM-2-2024-09-17

சென்னை, ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல என்று சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் செப் 15ம் தேதி 'பேரறிஞர்'அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தி.மு.க. தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க.'முப்பெரும் விழா' சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தி.மு.க. முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, கடந்த 1985ம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு  வருகிறது. கட்சியினர் மத்தியில் விருது பெறுபவர்கள் மிக கவுரவமாக பார்க்கப்படுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர். இதன்படி பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி நிஷா ராமநாதன், கலைஞர் விருது - எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

தி.மு.க. முப்பெரும் விழாவில் இருபெரும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் ஒரு நாற்காலியில் ஏ.ஐ. மூலம் கலைஞர் கருணாநிதி அமர்ந்து பேசுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றொரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அருகில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில்,“பெரியார் வடித்த கொள்கையை, அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டி காக்கப்பட்ட திடமான இயக்கத்தை ஓங்கி ஒலிக்க செய்து கம்பீரமாக ஆட்சியில் அமர வைத்திருக்கும் மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி என் மனம் பெருமை கொள்கிறது.

ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு, உழைப்பு... 55 ஆண்டுகளாக கட்சிக்காக அயராது உழைத்து, திராவிட செம்மலாய் இந்தியாவில் சிறப்பான முதல்-அமைச்சராக சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, பாதையில் ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் ஸ்டாலின். வாழ்க பெரியார், அண்ணாவின் புகழ் ஓங்குக திராவிட மாடல் என்று அவர் கூறினார். இந்த விசேஷ ஏற்பாட்டால் தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். 

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் விழாவில் பேசியதாவது., ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரனமான சாதனை அல்ல. தமிழ்நாடும் தி.மு.க.வும் எனது இரு கண்கள். தி.மு.க. பவள விழா எனது தலைமையில் கொண்டாடுவது எனக்கு கிடைத்த பெருமையாகும். தொண்டர்கள் இல்லாமல் தி.மு.க. இல்லை. தொண்டர்கள் இல்லாம, நான் இல்லை. தொண்டர்களின் உழைப்பு, வியர்வையால்தான் தி.மு.க. இன்று உயர்ந்து நிற்கிறது. பவள விழா, முப்பெரும் விழா எழுச்சிமிகு மாநாடு போல் நடைபெற்று வருகிறது. அமெரிக்க பயணத்திற்கு சென்றோம் என்பதை விட வென்றோம் என்று சொல்வதை சரியாக இருக்கும்  என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து