முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      விளையாட்டு
Sri-Lanka-win 2024-03-31

Source: provided

10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தங்களது அணிகளை அறிவித்து விட்டன. இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அணிக்கு சமாரி அத்தபத்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி விவரம்; சமாரி அத்தபத்து (கேப்டன்), அனுஷ்கா சஞ்சீவானி, ஹர்ஷிதா மாதவி, நிலக்ஷிகா டி சில்வா, இனோகா ரனவீரா, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, சச்சினி நிசான்சலா, விஷ்மி குனரத்னே, உதேஷிகா பிரமோதனி, அச்சினி குலாசூரியா, சுகண்டிகா குமாரி, இனோஷி பிரியதர்ஷினி, ஷாஷினி கிம்ஹானி, அமா காஞ்சானா.

________________________________________________________________________

மோதலை நினைவு கூர்ந்த யுவராஜ்

2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் தொடர்ந்து அடித்தார். அந்தப் போட்டியின் போது யுவராஜ் சிங்கை இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் ஏதோ கூற மைதானத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. கோபமடைந்த யுவராஜ் சிங்கை டோனி சமாதானப்படுத்தினார். இதற்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து யுவராஜ் சிங் பதிலடி கொடுத்தார்.

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:- நான் ஆறாவது சிக்சரை அடித்ததும் டோனி என்னிடம் 'நீங்கள் எப்பொழுது எனக்கு பின்னால் பேட்டிங் செய்ய வருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் இரண்டு மடங்காக இருக்கும்" என்று கூறினார். பிளின்டாப் வீசிய 18-வது ஓவரில் பவுண்டரி அடித்து விட்டு கடைசி பந்தில் நான் ஒரு ரன் எடுத்தேன். அப்பொழுது பிளின்டாப் அது ஒரு அதிர்ஷ்டமான ஷாட் என கூறினார். அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உன் கழுத்தை அறுப்பேன் என கூறினேன். கோபத்தில் இருந்த நான் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்க நினைத்தேன். அதன்படி 6 சிக்சர்களை அடித்தேன். ஆனால் இந்த பிரச்சினையை எல்லாம் பிளின்டாப் மைதானத்திலேயே விட்டு விட்டார். போட்டி முடிந்ததும் அவர் எனக்கு இதையெல்லாம் கூறி கை குலுக்கினார். இதனால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் அவரை மிகவும் மதிக்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.

________________________________________________________________________

நியூசி.யை வீழ்த்திய ஆஸ்திரேலியா

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மேக்கேவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக மேடி கிரீன் 35 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஷட், விலேமின்க், மோலினக்ஸ், சதர்லேண்ட், வேர்ஹாம், ஹீதர் கிரஹாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 144 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலகுடன் களம் புகுந்த ஆஸ்திரேலியா 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக போப் லிட்ச்பீல்ட் 64 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மோலி பென்போல்டு 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 22ம் தேதி நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து