முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

வாஷிம் : இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள் காங்கிரஸ் மீது பிரதமர் குற்றச்சாட்டியுள்ளார்.

மகராஷ்டிராவின் வாஷிம் நகரில் நடைபெற்ற விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறைக்கான திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர்  மோடி பேசியதாவது, 

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வளப்படுத்துவதில் பஞ்சாரா சமூகம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. கலை, பாரம்பரியம், ஆன்மிகம், வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர்.

நவராத்திரியின் புனிதமான நேரத்தில், விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் 18-வது தவணையாக  நாட்டின் 9.5 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் மாற்றப்பட்டுள்ளது. 

மகராஷ்டிராவின் இரட்டை என்ஜின் அரசு, மாநில விவசாயிகளுக்கு இரட்டிப்பு நன்மைகளை வழங்குகிறது. நமோ ஷேத்காரி மகாசம்மன் நிதி திட்டத்தின் கீழ், மகராஷ்டிராவின் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சுமார் 1900 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் சிந்தனை ஆரம்பத்திலிருந்தே அந்நியமானது. ஆங்கிலேயர் ஆட்சியைப் போலவே, காங்கிரஸ் குடும்பமும் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரை தங்களுக்குச் சமமாக கருதுவதில்லை. இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

இந்தியாவை ஒரு குடும்பம் மட்டுமே ஆள வேண்டும் என நினைக்கிறார்கள்.  இந்தியாவுக்காக நல்ல எண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எவ்வளவு நெருக்கமாக நிற்கிறது என்பதை அனைவரும் பார்க்கலாம். 

சமீபத்தில், டெல்லியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கிரஸ் தலைவர் ஒருவர்தான், அதன் பின்னணியில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இளைஞர்களை போதைப்பொருளின் பக்கம் தள்ளுவதன் மூலம் கிடைக்கும் பணத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து