முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரம்மோற்சவம் 7-வது நாள்: சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      இந்தியா
Trippati

Source: provided

திருமலை: திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று  காலையில், அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி, பத்ரி நாராயணராக எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 4-ம் தேதி தொடங்கி வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை, இரவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி  மாடவீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  

விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் காலையில் அனுமந்த வாகனத்திலும், மாலையில தங்க ரதத்திலும், இரவில் யானை வாகனத்திலும் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.  விழாவின் 7-ம் நாளான நேற்று  காலையில், அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி, பத்ரி நாராயணராக எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலையப்ப சுவாமியின் பத்ரி நாராயண ரூபத்தை தரிசனம் செய்வதற்காக மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். பலர் பகவானுக்கு ஆரத்தி காட்டி வழிபட்டனர். விழாவில் தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, இணை செயல் அதிகாரிகள் கவுதமி, வீரபிரம்மம் மற்றும் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வாகன சேவையில் பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து