முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைப்பு: திருத்தப்பட்ட கல்வியாண்டு புதிய நாட்காட்டி வெளியீடு

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      தமிழகம்
School-Education 2022 02 11

சென்னை, பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைக்கப்பட்ட திருத்தப்பட்ட புதிய கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை கடந்த ஜூன் 8-ம் தேதி வெளியிட்டது. அதில் 220 தினங்கள் பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. 

மேலும் 19 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பணிச் சுமையை குறைக்கும் வகையில் வேலை நாட்களை குறைக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பள்ளிக்கல்வித் துறைக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கையை 210 தினங்களாக குறைத்து கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து திருத்தப்பட்ட கல்வியாண்டு புதிய நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் 19 சனிக்கிழமைகளில் வகுப்புகள் இருந்ததை மாற்றி, 4 சனிக்கிழமைகளில் மட்டுமே வகுப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஏற்கெனவே 2 சனிக்கிழமைகளில் வகுப்புகள் முடிந்துவிட்டன. இதனுடன் பழைய நாட்காட்டியில் பள்ளி இறுதி வேலை நாட்கள் ஏப்ரல் 25-ம் தேதியாக இருந்தது. அதை தற்போது ஏப்ரல் 30-ம்தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேலைநாட்கள் 210 தினங்களுக்கு குறையாமல் பார்த்துக் கொள்ள பள்ளிகளுக்கு கல்வித்துறை அறுவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து