முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு அணிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வதே இலக்கு : விராட் கோலி பேட்டி

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

பெங்களூரு : அடுத்த ஐ.பி.எல். தொடருக்கான பெங்களூரு அணியில் விராட் கோலி முதல் வீரராக தக்க வைக்கப்பட்டுள்ள நிலையில், பெங்களூரு அணிக்காக ஒரு ஐ.பி.எல். கோப்பையாவது வென்று கொடுப்பதே இலக்கு என்று அவர் தெரிவித்துள்ளார்.

மெகா ஏலம்... 

18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது. இதற்காக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மேலும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் காலக்கெடு முடிவுக்கு வந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்து விட்டன.

மூன்று  வீரர்கள்...

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) 3 வீரர்களை தக்க வைத்துள்ளது. அதன்படி விராட் கோலி ( ரூ. 21 கோடி), ரஜத் படிதார் ( ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி) ஆகியோரை தக்க வைத்துள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். தொடர் ஆரம்பம் ஆன முதல் தற்போது வரை 18 சீசன்களாக ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

நினைத்துக்கூட... 

இந்நிலையில் பெங்களூருவை தவிர்த்து மற்ற அணிக்காக விளையாடுவதை தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று விராட் கோலி கூறியுள்ளார். மேலும் அடுத்த 3 வருடங்களில் பெங்களூரு அணிக்காக ஒரு ஐ.பி.எல். கோப்பையாவது வென்று கொடுப்பதே இலக்கு என்றும் விராட் கோலி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த ஏலத்தில் ஒரு அணியை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. அடுத்த 3 வருடங்களில் ஒரு முறையாவது ஐ.பி.எல். பட்டத்தை வெல்வதே இலக்கு. அதற்காக எப்போதும் போல எங்களின் சிறந்த செயல்பாடுகளை கொடுக்கப் போகிறோம். கிரிக்கெட்டை விளையாடும் விதத்தில் எங்களுடைய ரசிகர்களை பெருமைப்படுத்த முயற்சிப்பேன். 

சிறப்பானது... 

எனக்கு ஆர்சிபி என்றால் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த பல வருடங்களில் அது ஸ்பெஷல் தொடர்பை கொண்டுள்ளது. அது இன்னும் வலுவாக வளரும். ஆர்சிபி அணிக்காக விளையாடும் அனுபவம் இன்னும் சிறப்பானது. ரசிகர்களும் அனைவரும் இந்த அணியில் ஒரே வழியில் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அடுத்த 3 வருடம் முடியும்போது நான் ஆர்சிபி அணிக்காக 20 வருடங்கள் விளையாடி முடித்திருப்பேன். அதுவே எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயம். இப்படி ஒரே அணிக்காக இவ்வளவு வருடங்கள் விளையாடுவேன் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. இந்த அணியை விட்டு வேறு அணியில் விளையாடுவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து