முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்த தமிழக தொழிலாளர்கள் 4 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை:கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் ரயில்...

திருவனந்தபுரம் - டெல்லி இடையே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுகிறது. இந்த ரயில் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து கேரளாவின் பாலக்காடு மாவட்டம் சோரனூர் அருகே வந்துகொண்டிருந்தது. இந்நிலையில், மாலை 3.05 மணியளவில் சோரனூர் பாலத்தில் அமைந்துள்ள தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது, சோரனூர் ரயில்வே பாலத்தில் ரயில்வே ஒப்பந்த ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

தூய்மை பணியில்... 

வேகமாக வந்த ரயில் தண்டவாளத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் உள்பட ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் மீதும் மோதியது. இந்த கோர விபத்தில் ஊழியர்கள் அனைவரும் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த ரயில்வே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சேலத்தை சேர்ந்த... 

தகவலறிந்து விரைந்து வந்த ரயில்வே போலீசார், உயிரிழந்த 3 பேரிடன் உடலைகளையும் மீட்டுள்ளனர். ஆனால், ரயில் மோதியதில் பாரதபுலா ஆற்றில் தூக்கி வீசப்பட்ட மற்றொரு ஊழியரின் உடலை தேடி வருகின்றனர். ரயில் மோதியதில் உயிரிழந்த 2 பெண்கள் உள்பட 4 தூய்மை பணியாளர்களும் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன், வள்ளி, லட்சுமணன் என்பது விசாரணையில் தெரியவந்தது.

நிவாரணம் அறிவிப்பு...

இந்நிலையில் கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர் அருகில் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த துப்புரவுப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

அதிர்ச்சி, வேதனை...

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது., கேரளா மாநிலம், பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகில் நேற்று முன்தினம் (02.11.2024) பிற்பகல் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ரயில் பாதையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சேலம் மாவட்டம் மற்றும் வட்டம், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்(வயது 55) த/பெ.அண்ணாமலை, வள்ளி (வயது 45) க/பெ.லட்சுமணன், காரைக்காடு, டி.பெருமாள் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் (வயது 45) த/பெ.ராமசாமி, மற்றும் அல்லிக்குட்டையைச்சேர்ந்த ராஜம்மாள் (வயது 43) த/பெ.வீரன் ஆகிய நால்வரும் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்,வேதனையும் அடைந்தேன்.

தலா ரூ.3 லட்சம்...

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து