முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் அதிபர் ஜோபைடன் டுவிட்டரில் தகவல்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      உலகம்
Joe-Biden-2024-11-07

வாஷிங்டன், அடுத்த தலைமுறையினர் எதிர்பாக்கும் ஒரு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார் என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்ப்  வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.  

அமெரிக்காவின் 47-வது அதிபராக  டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அதற்கான வேலைப்பாடுகள் வெள்ளை மாளிகையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.  அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்பிற்கு தொலைபேசி வாயிலாக ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறும் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து, ஜோ பைடன்  நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ஜோ பைடன் சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். நாட்டை ஒன்றிணைக்க உழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா பார்க்கும் ஒரு சிறந்த நிர்வாகி கமலா ஹாரிஸ். அவரிடம் நேர்மையும், தைரியமும்  உள்ளது.  அசாதரண  சூழ்நிலையிலும் அவர் ஒரு வரலாற்று பிரசாரத்தை முன்னெடுத்தார்.  

தொடர்ந்து மக்களுக்காக போராடுவார்.  2020-ல் நான் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட போது, கமலாவை துணை  அதிபராக தேர்ந்தெடுத்தது தான் நான் எடுத்த முதல் முடிவு. இதுவே எனது சிறந்த முடிவு ஆகும்.கமலா ஹாரிஸ்  தொடர்ந்து உரிய நோக்கத்துடனும், உறுதியுடனும், மகிழ்ச்சியுடனும் அரசை எதிர்த்து குரல்கொடுப்பார்.  

அனைத்து அமெரிக்க மக்களுக்கும் ஒரு சிறந்த சாம்பியன் ஷிப்பாக இருப்பார். எல்லாவற்றிக்கும் மேலாக அமெரிக்காவின் எதிர்காலத்தில் முத்திரை பதிக்கும் போது அடுத்த தலைமுறையினர் எதிர்பாக்கும் ஒரு சிறந்த தலைவராக கமலா ஹாரிஸ் இருப்பார். இவ்வாறு அந்த பதிவில் ஜோபைடன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து