முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு விபத்துகளில் உயிரிழக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

விருதுநகர் : பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் பட்டம்புதூர் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ.101 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார். பின்னர்  அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

விருதுநகரில் 95 சதவீதத்திற்கும் மேல் 12-ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிகளவில் உயர்கல்வி சேர்க்கை நடைபெறுவது முக்கிய சாதனை. 

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும். 

விருதுநகர் மாவட்ட கலெக்டரின் கீழ் இதற்கு தனி நிதியம் உருவாக்கப்படும். கல்விச் செலவை அரசே ஏற்று நடத்த முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். 

வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.  3 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன.  பெருந்தலைவர் காமராஜரை நமக்கு வழங்கிய மண் விருதுநகர். பெருந்தலைவர் காமராஜரின் மறைவின் போது, அவரது மகன் மாதிரி அவருடைய இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. எனது திருமணத்திற்கு காமராஜர் வந்ததை மறக்கவே முடியாது. 

எனவே, இந்த மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி,  காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் இருக்கின்ற கண்மாய்களும், அணைக்கட்டுகளும், 17 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.  அதுமட்டுமல்ல, காரியாப்பட்டி வட்டத்தில், தெற்காற்றின் குறுக்கே 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அணை ஒன்றும் கட்டப்படும்.  

அத்துடன், விருதுநகர் வட்டத்தில் இருக்கின்ற கவுசிகா ஆறு,  அருப்புக்கோட்டை வட்டத்தில் இருக்கின்ற கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் 41 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும். வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் இருக்கின்ற 22 கண்மாய்கள், 18 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அது புனரமைக்கப்படும்.

அதேபோல், காலிங்கபேரி, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம் மற்றும் கோல்வார்பட்டி அணைகள் 23 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். அத்துடன் அந்த அணைப் பகுதிகளில், 2 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும் என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து