முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு: நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      சினிமா
Nayanthara-documentary-revi

சென்னை, நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன்  9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமண நிகழ்வுகளை ஆவணப்படுத்தி பியாண்ட் தி ஃபேரி டேல் என்ற பெயரில் உருவான படத்தின் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஆவணப்படம் கடந்த நவ. 18 ஆம் தேதி வெளியானது.

முன்னதாக, இந்த ஆவணப் படத்தில் நடிகர் தனுஷின் வோண்டர்பார் நிறுவனம் தயாரித்த 'நானும் ரௌடி தான்' படத்தில் பணியாற்றிய நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இடம்பெற்ற சில நொடி காட்சிகள் இடம்பெற்றிருந்தது.இதற்கு எதிராக 10 கோடி ரூபாய் கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்து தனுஷ் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நயன்தாரா ஒரு 3 பக்க அறிக்கையை வெளியிட்டார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை) நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், நயன்தாரா மீது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய தனுஷ் தரப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தனுஷின் குற்றச்சாட்டு தொடர்பாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்து வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து