முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் ஆக 31 வரை அமலில் இருக்கும்: நெல்லுக்கு ஆதரவு விலை 2,500 ரூபாயாக அதிகரிப்பு : தமிழ்நாடு அரசாணை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : தமிழகத்தில் நெல்லுக்கான ஆதரவு விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் செப். 1 முதல் 2026 ஆக 31 வரை அமலில் இருக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஆதரவு விலை சாதாரண ரக நெல்லாக இருந்தால், குவிண்டாலுக்கு ரூ.2500ம், சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2545 ஆகவும் வழங்கப்படும்.

இந்த நடைமுறையானது, வரும் செப். 1 முதல் 2026 ஆக 31 வரை அமலில் இருக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது விவசாயிகளிடமிருந்து நேரடியாக விவசாயப் பொருள்களை மாநில அரசு கொள்முதல் செய்வதற்காக நிர்ணயிக்கும் விலையாகும்.

மத்திய அரசு நிர்ணயிக்கும் ஆதரவு விலையுடன், மாநில அரசு கூடுதலாக ஊக்கத் தொகையும் சேர்த்து இந்த ஆதரவு விலையை உயர்த்தி அறிவிக்கும்.

இதுபோல, தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி, நெல், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து