முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 6-வது நாளாக காற்றின் தரம் மிகவும் மோசம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      இந்தியா
Delhi 2024-10-28

Source: provided

 

புது டெல்லி: டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து 6-வது நாளாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் மக்களில் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்று தரக் குறியீடு 329 ஆக பதிவானதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் நேற்று காலை மூடுபனி நிலவியது.

டெல்லியில் உள்ள 39 கண்காணிப்பு நிலையங்களில், பாவனா (426) மற்றும் முண்ட்கா (408) ஆகிய இரண்டு நிலையங்களில் காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் 22 நிலையங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவிலும் மீதமுள்ள நிலையங்களில் காற்றின் தரம் மோசமான பிரிவிலும் பதிவாகி உள்ளன. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது.

101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம். 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது. 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது. 401 முதல் 450 வரை இருந்தால் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது. 450 மேல் இருந்தால் கடுமையான பிரிவுக்கு மேல் காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து