முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கக்கடலில் புயல் உருவானது

வெள்ளிக்கிழமை, 29 நவம்பர் 2024      தமிழகம்
Weather-Center 1

சென்னை, வங்கக்கடலில் புயல் உருவானதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, படிப்படியாக வலுவடைந்து நேற்று பிற்பகல் புயலாக மாறியது. சென்னைக்கு தென்கிழக்கில் 300 கிமீ தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ள இந்த புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே இன்று கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு பெங்கல் புயல் (Cyclone Fengal) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை சவுதி அரேபியா சூட்டியுள்ளது. புயல் சின்னம் உருவானபோதே‘பெங்கல் புயல்’ என பரவலாக உச்சரிக்கப்பட்டது. ஆனால், சவுதி அரேபியாவில் இந்த வார்த்தையானது பெஞ்சல் (FENJAL) என உச்சரிக்கப்படும். எனவே, தற்போது புயலின் பெயரை பெஞ்சல் என உச்சரிக்கும்படி வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆசிய, பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் (UNESCAP) பெயரிடும் மரபுகளின்படி, இந்த முறை வங்கக் கடலில் உருவான புயலுக்கான பெயரை சவுதி அரேபியா முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

தென் மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (நேற்று) பிற்பகல் 2.30 மணியளவில் பெங்கல் புயலாக மாறியது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 முகாம்கள் தயாராக உள்ளன. புயல் உருவாகும் சூழலில் நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேரிடர் மீட்புப்படையினர் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்" என்றார்.

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 380 கி.மீ தொலைவிலும் நாகையில் இருந்து 300 கி.மீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து