முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஞ்சா வழக்கு: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      தமிழகம்
Alikhan-Duclak 2024-12-04

Source: provided

சென்னை: மெத்தபெட்டமைன் மற்றும் மேஜிக் காளானை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலிகான் துக்ளக், சேது ஷாயி, முகமது ரியாஸ் அலி, பைசல் அகமது உள்ளிட்ட 4 பேரிடமும்  இரண்டாவது நாளாக திருமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

2019-ம் ஆண்டு நடிகர் மன்சூலின் அலிகான் இயக்கத்தில் உருவான படத்தில் அலிகான் துக்ளக் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனிடையே கடந்த மாதம் 3-ம் தேதி போலீசாரால் கைதுசெய்யப்பட்ட கார்த்திகேயன் என்பவரிடம் இருந்து ஆன்லைனில் கஞ்சா வாங்கி  பயன்படுத்தியது மட்டுமில்லாமல் விற்பனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் நேற்று முன்தினம் மேஜிக் காளான், மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை அலிகான் துக்ளக் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.  ஏற்கனவே ஜெ.ஜெ.நகர் போலீசாரால் தனியார் கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் ஆன்லைனில் கஞ்சா பயன்படுத்தி வந்ததோடு அதிக விலைக்கு விற்பனைக்கு செய்து வந்ததாக தெரியவந்தது. இதனிடையே கைதானவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அலிகான் துக்ளக் கஞ்சா பயன்படுத்தி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைதானவர்களிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்றது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து