முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிராட்மேன் தொப்பி ரூ.2.63 கோடிக்கு ஏலம்

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      விளையாட்டு
Bradman 2024-12-04

Source: provided

கான்பிரா : டான் பிராட்மேன் தொப்பி ரூ.2.63 கோடிக்கு ஏலம் போனது.

கிரிக்கெட் ஜாம்பவான்... 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சர் டான் பிராட்மேனின் 'பேக்கி கிரீன்' தொப்பி, டிசம்பர் 3-ம் தேதி சிட்னியில் நடந்த ஏலத்தில் விற்கப்பட்டது. 1947-1948-ல் இந்தியாவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவிற்காக கடைசியாக விளையாடிய டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் அணிந்திருந்த தொப்பி 3,90,000 டாலருக்கு (ரூ. 2.14 கோடி), வரியுடன் சேர்த்து 479,700 டாலராக (ரூ.2.63 கோடி) உயர்த்தப்பட்டு விலைக்கு வாங்கப்பட்டது.

அதிக முச்சதங்கள்... 

டான் பிராட்மேன், 52 டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களுடன் 6996 ரன்களை எடுத்துள்ளார். இவர் அதிக இரட்டை சதங்கள் (12), அதிக முச்சதங்கள் (2) அடித்தவர் என்ற சாதனையை படைத்தவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆஸ்திரேலியா இங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அப்போது பிராட்மேன் முதல்தரப் போட்டிகளில் தனது 100-வது சதத்தை நிறைவு செய்தார்.

இரட்டை சதமும்... 

3 டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பிராட்மேன், 178.75 சராசரியுடன் 715 ரன்கள் எடுத்தார். அதில் 3 சதங்களை பதிவு செய்தது, மட்டுமல்லாமல் அதில் ஒன்று இரட்டை சதமும் விளாசினார். அந்தத் தொடரில் இந்திய அணியின் மேலாளருக்கு டான் பிராட்மேன் தனது தொப்பியை பரிசளித்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பழங்காலப் பொருள்கள் வாங்கும் சேகரிப்பாளர் ஒருவரால் அந்தத் தொப்பி வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து