முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக தனது சொந்த கிராமத்திற்கு சென்றார் முர்மு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      இந்தியா
Murmu 2023 04 18

புவனேஸ்வர், ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக சொந்த கிராமத்திற்கு சென்றார் திரெளபதி முர்மு, அங்கு அவர் இது கிராமமல்ல, குடும்பம் என்று தெரிவித்தார்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒடிசா மாநிலம் மெயுபஜி மாவட்டம் அப்பர்பிடா கிராமத்தில் 1958ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி பிறந்தார். இதனிடையே, திரெளபதி முர்மு கடந்த 2022 ஜுலை 25ம் தேதி நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக திரெளபதி முர்மு தான் பிறந்த ஊரான அப்பர்பிடா கிராமத்திற்கு நேற்று சென்றார்.

சொந்த ஊரில் தான் படித்த பள்ளிக்கூடத்திற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு சென்றார். அங்கு மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மேலும், ஊர் மக்களையும் அவர் சந்தித்தார். மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி முர்மு, இது கிராமமல்ல, குடும்பம் என்று பேசினார். மேலும், 66 வயது ஆனபோதும் நான் வளர்ந்துவிட்டேன் என்று தோன்றவில்லை. எனது கிராமத்திலும், பள்ளியிலும் இப்போதும் நான் குழந்தைபோன்று உணருகிறேன்' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து