எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சிதம்பரம் : பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த ஜன.4-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழவீதியில் தேர்நிலையை அடைந்தன.
தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனர். நேற்று மாலை 3 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கு, அம்பாளுக்கும் சீர்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இரவு நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் ஸ்வர்ணாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும் சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் 3.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசனக் காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். ஜன.14-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், ஜன.15-ம்தேதி புதன்கிழமை புதுப்பிக்கப்பட்ட ஞானப்பிரகாசர் தெப்பகுளத்தில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் உ. வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் து. ந. சுந்தரதாண்டவ தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் ச.க. சிவராஜதீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். விழுப்புரம் சரக டிஐஜி திஷாமிட்டல், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் நேரடி மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி டி. அஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ரமேஷ்பாபு, கே.அம்பேத்கர் மற்றும் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 23 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
காசா: நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
16 Jul 2025டெல் அவிவ், காசாவில் நிவாரண பொருள் வழங்கும்போது கூட்ட நெரிசலில் ஏற்பட்டது. அப்போது 20 பேர் உயிரிழந்தனர்.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல்- 4 இந்திய நகரங்களுக்கு இடம்
16 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் மாணவர்களுக்கான சிறந்த நகரங்கள் தரவரிசையில் 4 நகரங்கள் இடம் பெற்றது.
-
ஐ.சி.சி. பேட்ஸ்மேன் தரவரிசை: ஜோ ரூட் மீண்டும் முதலிடம்
16 Jul 2025லண்டன் : ஐ.சி.சி.
-
ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
16 Jul 2025நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ்
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஜூலை 30-ல் மருத்துவ கலந்தாய்வு தொடக்கம்
16 Jul 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30 ஆம் தேதி தொடங்கும் என் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
கடலூர் மாவட்டத்தில் விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடல்
16 Jul 2025சிதம்பரம் : கடலூர் மாவட்டத்தில் நேற்று விவசாய பிரதிநிதிகளுடன் இ.பி.எஸ். கலந்துரையாடினார்.
-
அமெரிக்காவில் திடீர் கனமழை
16 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பெய்த கனமழைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ள பெறுக்கு ஏற்பட்டுள்ளது.
-
தோல்வி குறித்து சிராஜ்
16 Jul 2025லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி.போராடித் தோற்றது.ஜடேஜா தனி ஆளாக கடைசி வரை போராடிய நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில்
-
'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு
16 Jul 2025சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
-
மகளிர் டி-20 தரவரிசை: டாப் 10-ல் ஷபாலி வர்மா
16 Jul 2025லண்டன் : மகளிர் டி-20 ஐ.சி.சி.
-
திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு: தமிழக அரசு விளக்கம்
16 Jul 2025திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் மனிதர்களை தாக்கிய வினோத விலங்கு குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
16 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என துரைமுருகன் அறிவித்துள்ளார்.;
-
தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு
16 Jul 2025சென்னை : படத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
-
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைப்பதற்கு தடை
16 Jul 2025சென்னை : கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
த.வெ.க. கொடி நிறம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
16 Jul 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடி நிறம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
-
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம்
16 Jul 2025சென்னை : கந்தசாமி கோவிலில் அன்புமணி ராமதாஸ் சாமி தரிசனம் செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-07-2025.
17 Jul 2025 -
போர்களை எதிர்கொள்ள தொழில்நுட்பம் தேவை: முப்படை தலைமை தளபதி பேச்சு
16 Jul 2025புதுடில்லி, 'இன்றைய போர்களை எதிர்த்துப் போராட நாளைய தொழில்நுட்பம் தேவை' என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
-
ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கம்
16 Jul 2025மும்பை : ரோகித், விராட் கோலி ஓய்வு குறித்து முதல்முறையாக பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது. பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.