முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பா.ஜ.க. புதிய தலைவராக மீண்டும் அண்ணாமலைக்கு வாய்ப்பு? இந்த வாரம் அறிவிப்பு வெளியாகிறது

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      அரசியல்
Annamalai 2024 11 20

சென்னை, தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் பெயர் இந்த வார இறுதியில்    அறிவிக்கப்பட உள்ள நிலையில் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

பா.ஜ.க. மாநில தலைவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை கடந்த 2021-ம் ஆண்டு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலையின் பதவி காலம் நிறைவடைகிறது.

தற்போது உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. கிளை நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மாவட்ட தலைவர்கள் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக புதிய மாநில தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி நாளை (வெள்ளிக்கிழமை)சென்னை வருகிறார்.

அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் புதிய தலைவர் தொடர்பாக கலந்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் வலிமையான தலைமை வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். கட்சியின் விதிமுறைப்படி இரண்டு முறை ஒருவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கலாம். அந்த வகையில் அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி அமைப்பது தொடர்பாக விமர்சனத்துக்குள்ளானாலும் அவரது தலைமையின் கீழ் கட்சி வளர்ச்சி அடைந்து இருப்பதை கட்சி மேலிடம் உணர்ந்துள்ளது.

இதற்கிடையில் தலைவர் பதவியை குறிவைத்து மேலும் ஒன்றிரண்டு பேர் காய் நகர்த்தி வருவதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க.வை எதிர்கொள்ள வலிமையான தலைமை தேவை என்ற அடிப்படையில் டெல்லி மேலிடம் ஆலோசனை செய்து வருகிறது. சென்னை வரும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முதல் மூன்று பேர் பெயர் பட்டியலை தேர்வு செய்து டெல்லி மேல் இடத்திற்கு அனுப்ப உள்ளார்.

அதைத் தொடர்ந்து இந்த வார இறுதிக்குள் புதிய மாநில தலைவர் யார் என்பதை டெல்லி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து