முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சைப் அலிகானிடம் ரூ.1 கோடி கேட்ட குற்றவாளி போலீஸ் விசாரணையில் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2025      இந்தியா
saifalikhan 2025-01-17

Source: provided

மும்பை: நடிகர் சைப் அலிகான் கத்திக்குத்து விவகாரத்தில், அவரிடம் குற்றவாளி ரூ.1 கோடி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சைப் அலி கானின் வீட்டில், மர்மநபர் ஒருவர்  கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அதைத் தடுக்கவந்த சைப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில், அவர் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. சைப் அலிகானை கத்தியால் குத்தியவரைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை 20 தனிப்படைகளை அமைத்துள்ளது.

சத்குரு ஷரணில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை முயற்சியின் போது நடந்த தாக்குதலுக்குப் பிறகு, தாக்குதல் நடத்திய நபரின் உருவம் பதிவான கண்காணிப்பு கேமராக் காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுபற்றி காவல்துறை தரப்பில் இருந்து கூறுகையில், “கொள்ளையடிக்க வந்தவர், அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவரது உடைகளை மாற்றியிருக்கலாம். அவரைப் பிடிக்க 20 தனிப்படைக் குழுக்களை அமைத்து குற்றவாளிகளைத் தேடத் தொடங்கியுள்ளோம். மேலும், குற்றவாளி மீது முன்பு ஏதாவது குற்றப் பதிவு உள்ளதா என்பதைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர்.

சைப் மற்றும் கரீனா கபூர்-கானின் இளைய மகன் ஜெஹ் ஆகியோரின் அறைக்குள் ஊடுருவிய நபர் முதலில் நுழைந்து, எதிர்கொண்டபோது ரூ.1 கோடி கேட்டுள்ளார். அதன்பின்னர் அவர்களை கத்தியால் தாக்க முயன்றுள்ளார்” என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து