முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் மருத்துவர் கொலையில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு தொடர்பு : நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் கூச்சலால் பரபரப்பு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      இந்தியா
Sanjay-Roy 2024-08-26

Source: provided

கொல்கத்தா : பெண் மருத்துவர் கொலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை வாசித்தபோது, எப்போதும் போல அப்பாவியாக முகத்தை வைத்திருந்த சஞ்சய் ராய், நீதிமன்றத்துக்குள்ளேயே தான் ஒரு அப்பாவி என்றும், ஒரு ஐபிஎஸ் அதிகாரிகள்கு இந்த கொலையில் தொடர்பிருப்பதாகவும் கத்தியதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி, ஆர்ஜிகர் மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை விவரங்களை திங்கள்கிழமை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, அதனைக் கேட்ட சஞ்சய் ராய், நான் தவறுதலாக வழக்கில் சிக்கவைக்கப்பட்டுவிட்டேன், இதனை நான் செய்யவில்லை. உண்மையில் இதனை செய்தவர்களை விட்டுவிட்டார்கள். இதில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கும் தொடர்பிருக்கிறது என்று கூச்சலிட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது.

நான் எப்போதும் என் கழுத்தில் ருத்திராட்சம் இணைக்கப்பட்ட சங்கிலியை அணிந்திருப்பேன். ஒருவேளை இந்தக் குற்றத்தை நான் செய்திருந்தால், அங்கேயே என் செயின் அறுந்து விழுந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இந்தக் குற்றத்தை என்னால் செய்திருக்க முடியாது என்றும் அவர் கத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானதும், ஆர்ஜிகர் மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் ஏஎன்ஐ செய்தியாளர்களிடம் பேசுகையில், மருத்துவமனை நிர்வாகம் சம்பவம் நடந்ததும் ஆதாரங்களையும் சாட்சிகளையும் அழித்துள்ளது. இந்த சஞ்சய் ராயைக் காப்பாற்றவா இதனைச் செய்தது. இதில் வேறு சிலருக்கும் தொடர்பிருக்கிறது. அதனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து