எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வங்காளதேச பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் சிட்டகாங் கிங்ஸ் அணியை வீழ்த்தி பார்ச்சூன் பாரிஷால் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிது. இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் லீக் தொடரான ஐ.பி.எல். போன்று வங்காளதேசத்தில் 'வங்காளதேச பிரீமியர் லீக்' நடத்தப்படுகிறது. இதன் 11-வது சீசன் தற்போது முடிவடைந்துள்ளது. இதன் இறுதிப்போட்டியில் பார்ச்சூன் பாரிஷால் - சிட்டகாங் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற பார்ச்சூன் பாரிஷால் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிட்டகாங் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கவாஜா நபே மற்றும் பர்வேஸ் ஹொசைன் அதிரடியாக விளையாடி வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் கவாஜா நபே 66 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கிரஹாம் கிளார்க்கும் (44 ரன்கள்) அதிரடியாக விளையாட அணியின் ரன் வேகம் எகிறியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சிட்டகாங் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பர்வேஸ் ஹொசைன் 78 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ச்சூன் பாரிஷால் அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் ரன் வேகத்தை குறையாமல் பார்த்துக்கொண்டனர். கேப்டன் தமிம் இக்பால் அரைசதம் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். அவருடன் தவ்ஹித் ஹாரிடாய் (32 ரன்கள்), கைல் மேயர்ஸ் (46 ரன்கள்) இருவரும் கணிசமான பங்களிப்பை வழங்க பார்ச்சூன் பாரிஷால் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் அடித்து வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசன் மிராசுக்கு வழங்கப்பட்டது.
6-வது இடத்தில் தமிழக அணி
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது. அபினவ் சஞ் சீவ், மனீஷ் சுரேஷ் குமாா், நிக்கி பூனச்சா உள்ளிட்டோா் அடங்கிய அணி 2-0 என்ற கணக்கில் கா்நாடகத்தை வீழ்த்தியது. தியா ரமேஷ், லட்சுமி பிரபா ஆகியோா் அடங்கிய தமிழக மகளிா் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.
தமிழ்நாடு 13 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் ஆக மொத்தம் 49 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 6-வது இடத்தில் நீடிக்கிறது. சா்வீசஸ் 39 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என 66 பதக்கங்களுடன் முதல் இடத்துக்கு முன்னேறியது. கா்நாடகம் 30 தங்கம், 12 வெள்ளி, 16 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும், மராட்டியம் 23 தங்கம், 39 வெள்ளி, 45 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
இலங்கை வீரருக்கு மரியாதை
100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த கருணரத்னே தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள். இலங்கை - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை தனது முதல் இன்னிங்சில் 257 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 414 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்மித் 131 ரன்களும், அலெக்ஸ் கேரி 156 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், 100 போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த கருணரத்னே தனது கடைசி இன்னிங்ஸில் ஆட்டமிழந்து செல்லும்போது ஆஸி. வீரர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வழியனுப்பினார்கள். இந்த விடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. டெஸ்ட்டில் மொத்தமாக 7,222 ரன்களுடன் ஓய்வுபெற்றுள்ளார். 16 சதங்கள், 39 அரைசதங்கள் அடித்துள்ள கருணரத்னே கிட்டதட்ட 40 சராசரியுடன் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தந்தையானார் பேட் கம்மின்ஸ்
பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் (வயது 31). இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றது. பேட் கம்மின்ஸ் தனது நீண்ட நாள் காதலியான பெக்கி பாஸ்டனை கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆல்பி என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பெக்கி பாஸ்டன் 2வது முறையாக கர்ப்பம் அடைந்தார். இவருக்கு இந்த மாதம் குழந்தை பிறக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பேட் கம்மின்ஸ் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த குழந்தைக்கு எடித் மரியா போஸ்டன் கம்மின்ஸ் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
நேபாளத்தில் அமைதி திரும்ப இந்தியா முழுஆதரவு அளிக்கும்: சுசீலா கார்கிடம் பிரதமர் மோடி உறுதி
18 Sep 2025புதுடெல்லி, நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
ராஜஸ்தான்: காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கொடூர தாய்..!
18 Sep 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை தாய் ஒருவர் ஏரியில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியு
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
தலைவர்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: த.வெ.க.வுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
18 Sep 2025சென்னை, த.வெ.க. பரப்புரைக்கு அனுமதி வழங்கக்கோரி வழக்கில் தலைவராக இருப்பவர்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுலின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Sep 2025புதுடெல்லி, வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியீடு
18 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப்.
-
இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும்: பியூஷ் கோயல்
18 Sep 2025மும்பை: இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்., உறுப்பினர்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்
18 Sep 2025புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் சலசலப்பு: தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
-
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல்: 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு..!
18 Sep 2025பிரேசிலியா: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமாக இறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வயநாட்டில் பிரியங்கா காந்தி
18 Sep 2025வயநாடு: வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.