எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு நிதி கிடைக்காவிட்டாலும்; நீதிக்காக போராடுவோம் என்று மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆவடியில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
முதல் மாநிலமாக...
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க., சார்பில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:- 2021 சட்டசபை தேர்தலின் போது என் மேல் நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை வழங்கினார்கள். அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன். இந்தியாவில் தமிழகத்தை முதல் மாநிலமாக வளர்த்தெடுத்து வருகிறோம். 2030க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று ஒரு மிகப்பெரிய குறிக்கோளுடன் உழைத்து வருகிறோம்.
சர்வாதிகார போக்கு...
பட்டினிச்சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது. அனைத்து துறைகளில் தமிழகம் வளர்ந்து வருகிறது. மத்திய அரசு மட்டும் ஒத்துழைப்பு கொடுத்தால், இன்னும் வேகமாக தமிழகம் வளர்ந்திருக்கும். மத்தியில் மைனாரிட்டி ஆட்சியை பா.ஜ., அமைத்தாலும், பழைய மாதிரியே சர்வாதிகார போக்கையே கடைபிடிக்கிறது. பேரு தான் மத்திய பட்ஜெட். அந்த பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களின் பெயரும் இடம்பெற்றிருக்கா? அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் வகையில் தான் பட்ஜெட் அமைந்திருக்கு. 4 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பே இல்லை. கல்விக்கு 2.3 சதவீதமும், சுகாதாரத்துக்கு 1.8 சதவீதமும் தான் ஒதுக்கியிருக்காங்க.
அக்கறை இல்லை....
பாதுகாப்புக்கு 4.19 லட்சம் கோடியும், உள்துறைக்கு 2.33 லட்சம் கோடியும் கொடுத்துள்ள பா.ஜ., சமூகநலத்துறைக்கு ரூ.60 ஆயிரம் கோடிதான் கொடுத்திருக்கிறார்கள். மக்கள் வளர்ச்சியில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை இதை விட சாட்சி வேண்டுமா? பட்டியல், பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு குறைவு, புதிய வேலைவாய்ப்புகள் இல்லை, எல்.ஐ.சி.,யை ஒழிக்க முயற்சி, உரம் மற்றும் பெட்ரோலிய மானியம் குறைப்பு தான் இந்தப் பட்ஜெட்டில் இருக்கிறது.
பீகார் மாநில தேர்தல்...
ரூ.12 லட்சம் ஆண்டு வருமானம் இருக்கிறவர்களுக்கு வருமான வரிச்சலுகை என அறிவித்துள்ளார்கள். இந்தியாவில் மக்கள் தொகை 140 கோடி. அதில், 2 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு தான் இந்த சலுகை. இதையே பெரிய சாதனையாக காட்டுகிறார்கள். அனைத்து மாநிலங்களுக்கான மத்திய பட்ஜெட் என்று சொல்லிவிட்டு, பீகார் மாநிலத்தின் பெயரை மட்டும் 6 முறை அறிவிக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏனெனில் அங்கு தான் சட்டசபை தேர்தல் வருகிறது. பீகார், ஆந்திராவுக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழகத்தை ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்று தான் கேட்கிறோம்.
வஞ்சிப்பது ஏன்..?
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே, 'நீங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமையா? இல்லை, தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவது பெருமையா?' உங்களுடைய மனசாட்சிக்கே இந்தக் கேள்வியை விட்டு விடுகிறேன். மாநிலங்களுக்கு நிதி தராத மத்திய அரசு, வட்டியில்லா கடனை கொடுக்கிறது. வடக்கில் நடப்பது ஆட்சியா? இல்லை வட்டிக் கடையா? இதுதான் கூட்டாட்சியா? இந்திய பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தமிழகத்தை வஞ்சிப்பது ஏன்? பா.ஜ.,வுக்கு தமிழகத்தை பிடிக்கலையா? நீங்கள் நிதியைக் கொடுக்காமல் இருக்கலாம். நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். நீங்கள் வஞ்சிப்பவராக இருக்கலாம். நாங்கள் வாழவைப்பவர்கள்.
கவர்னர் விமர்சிக்கிறார்...
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழை அவமதிப்பதையே வழக்கமாக கொண்டு வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் பேசுகிறார். தமிழகத்தை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாராட்டுகிறார். ஆனால், கவர்னர் இங்கு விமர்சிக்கிறார். தி.மு.க., ஆட்சி இருக்கும் வரையில் கவர்னர் ரவியும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர்களே நம்மை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை கவர்னர் மட்டுமல்ல எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
இந்தியர்களை காப்பாற்ற...
ஆன்மிகம் வேறு, அரசியல் வேறு எனும் பகுத்தறிவு உடைய மக்கள் வாழும் மாநிலம் தமிழகம். கும்பமேளாவுக்கு சென்றவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது பா.ஜ., அரசின் கடமையல்லவா? அமெரிக்காவில் இருந்து கைவிலங்கிட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது தான் இந்தியர்களை காப்பாற்றும் முறையா?. அமெரிக்கா அரசுடன் இந்தியர்களின் நிலை குறித்து பேசியிருக்க வேண்டாமா? இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-03-2025.
19 Mar 2025 -
பொது இடங்களில் உள்ள தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்ற துரைமுருகன் அறிவுறுத்தல்
19 Mar 2025சென்னை : சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இணங்கி பொது இடங்களில் உள்ள தி.மு.க.
-
போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாடலுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
19 Mar 2025கீவ் : போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாட லுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார்.
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை: வைகோ குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
19 Mar 2025புதுடெல்லி : இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் வைகோ குற்றச்சாட்டுககு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்.
-
சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் உருவச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
19 Mar 2025சென்னை : சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் உருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
மோசடி புகாரில் தமிழ்நாடு பாடநூல் மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ்
19 Mar 2025மதுரை : மோசடி புகாரில் தமிழ்நாடு பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
-
ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
19 Mar 2025சென்னை : ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்
19 Mar 2025திருப்பரங்குன்றம் : அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற
-
சென்னையில் ரூ.2 ஆயிரம் மாதாந்திர பேருந்து பயண அட்டை அறிமுகம் : அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்
19 Mar 2025சென்னை : சென்னையில் ரூ.2 ஆயிரம் மாதாந்திர ஏ.சி. பஸ் பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
-
திடக்கழிவில் இருந்து உரம் விவசாயிகளுக்கு விலை இன்றி வழங்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு
19 Mar 2025சென்னை : திடக்கழிவில் இருந்து உரம் விவசாயிகளுக்கு விலை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
19 Mar 2025சென்னை : தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
-
மிரட்டும் தொணியில் பேசுவதா? - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
19 Mar 2025சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது.
-
தமிழக கவர்னர் இன்று சென்னை திரும்புகிறார்
19 Mar 2025சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்புகிறார்.
-
ஆவின் மூலம் கூடுதல் பால் கொள்முதல் : சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
19 Mar 2025சென்னை : ஆவின் மூலம் கடந்த ஆட்சியை விட கூடுதலாக 11 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்
19 Mar 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பணிநியமன
-
தெரு நாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு : சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
19 Mar 2025சென்னை : தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது: தமிழ்நாடு அரசு
19 Mar 2025சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
-
சென்னைக்கு தடை இல்லாமல் குடிநீர் விநியோகம் இருக்கும் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்
19 Mar 2025சென்னை : சென்னைக்கு தடை இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை
19 Mar 2025ஸ்ரீநகர் : எல்ல தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான விசாரணையில் ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.
-
சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் - மஸ்க்
19 Mar 2025வாஷிங்டன் : சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
-
பாதுகாப்பு கோரிய ராஜபக்சவின் மனு தள்ளுபடி
19 Mar 2025கொழும்பு : மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
புதுச்சேரியில் வீடுதோறும் 20 லிட்டர் இலவச குடிநீர் கேன் வழங்கு திட்டம் : தமிழ் புத்தாண்டில் தொடக்கம்
19 Mar 2025புதுச்சேரி : புதுச்சேரியில் வீடுதோறும் இலவச குடிநீர் கேன் வழங்கு திட்டம் தமிழ் புத்தாண்டு முதல் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட ரெயில்வே தேர்வு-தேர்வர்கள் அதிர்ச்சி
19 Mar 2025புதுடெல்லி : ரெயில்வே துறையில் காலியாக உள்ள லோகோ பைலட் உள்ளிட்ட பணிகளுக்கு, குரூப்-டி நிலையிலான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நேற்று (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப
-
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு இடம்
19 Mar 2025திருப்பதி : இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
முன்கூட்டியே வகுப்புகள் தொடங்குவதால் என்ஜினீயரிங் கலந்தாய்வு நாட்கள் குறைய வாய்ப்பு
19 Mar 2025சென்னை : முன்கூட்டியே வகுப்புகள் தொடங்குவதால் என்ஜினீயரிங் கலந்தாய்வு நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.