முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிக முறை நாக் அவுட் சுற்றுக்கு தகுதி: நியூஸிலாந்து அணி சாதனை

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      விளையாட்டு
New-Zealand 2024-05-14

Source: provided

துபாய் : ஐ.சி.சி.  தொடரில் அதிக  முறைநாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணியில் நியூஸிலாந்து 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அணி சாம்பியன்...

ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபி 2025-ன் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிச் சென்றது. ரோஹித் சர்மா தலைமையில் இப்போது 2 ஐ.சி.சி.  கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி 2025 கோப்பைகளை ரோஹித் தலைமையில் வென்று தோனிக்கு அடுத்த இடத்தில் உள்ளார் ரோஹித்.

நியூஸிலாந்து...

2011 உலகக் கோப்பையை வென்ற பிறகே ஐ.சி.சி.  தொடரில் இந்திய அணி அதிகம் நாக் அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெற்ற அணியில் நம்பர் 1 ஆக உள்ளது.  இதற்கு அடுத்த இடத்தில் நியூஸிலாந்து உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பணபலம், உள்கட்டமைப்பு பலம் இல்லாத நியூஸிலாந்து அணி 8 முறை ஐ.சி.சி.  தொடர்களில் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி.  தொடர்களில் கடந்த 14 ஆண்டுகளில் 8 நாக் அவுட் சுற்றில் நுழைந்த நியூஸிலாந்து அணி ஒரே ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் தொடரில் மட்டும்தான் கோப்பையை வென்று சிம்மாசனம் ஏறியது. அதில் இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

முதல் பங்களிப்பு... 

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இது பற்றிக் கூறும்போது, “நியூஸிலாந்து அணியில் சில கடினமான வீரர்கள் உள்ளனர். அவர்கள் தேவைப்படும் தினத்தில் முழு முதல் பங்களிப்பு செய்கின்றனர். இதனால்தான் அரையிறுதி, இறுதி என்று அவர்கள் நுழைய முடிந்துள்ளது. கேன் வில்லியம்சன் ஆல் டைம் கிரேட். ரச்சின் ரவீந்திராவுக்கு இன்னும் பெரிய கரியர் உள்ளது.” என்று புகழ்ந்துள்ளார்.

கடும் ஆச்சரியம்...

விராட் கோலி அந்த அணியைப் பற்றிக் கூறும்போது, “குறைந்த வீரர்களை வைத்துக் கொண்டு நியூஸிலாந்து அணி ஆடும் விதம் எனக்கு உண்மையில் கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு முறை பெரிய ஆட்டங்களில் அவர்களுடன் மோதும் போது எங்களை மடக்க நல்ல திட்டமுடன் வருகின்றனர். உலகில் வேறு எந்த அணியும் நியூஸிலாந்து அளவுக்கு திட்டமிடலை துல்லியமாக நடைமுறைப்படுத்துவதில்லை. அவர்களுக்கு அந்தப் பெருமை உண்டு. கடந்த சில ஆண்டுகளாக நியூஸிலாந்து அளவுக்கு சீராக ஆடும் அணியை நான் கண்டதில்லை.” என்றார் விராட் கோலி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து