முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்திக் பாண்டியா கடினமான மனிதர்: மும்பை பயிற்சியாளர் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      விளையாட்டு
Hardik-Pandya 2023 08 02

Source: provided

மும்பை : ஹர்திக் பாண்டியா கடினமான மனிதர். அவர் கடினமான சூழ்நிலையில் மின்னும் கிரிக்கெட்டர் என மும்பை பயிற்சியாளர் மார்க் பௌச்சர் தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா... 

ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டது ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர் பலவாறு கிண்டல்களுக்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து, டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஸ் டிராபியில் ஹர்திக் சிறப்பாக விளையாடி நன்மதிப்பை மீட்டார். தற்போது, ஐ.பி.எல். முதல் போட்டியாக சி.எஸ்.கே.  அணியை சேப்பாக்கில் சந்திக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. முதல் போட்டியில் ஹர்திக் விளையாடமாட்டார். சூர்யகுமார் கேப்டனாக இருப்பார்.

கடினமான மனிதர்...

இந்நிலையில் மும்பை அணியின் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் கூறியதாவது: கடந்த சீசன் ஹர்திக் பாண்டியாவுக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பாண்டியா பீல்டிங்கிற்கு செல்லும்போது ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு 100 சதவிகிதம் மரியாதைக்கு தகுதியானவர். ஒரு கிரிக்கெட்டராக யாருக்கும் அப்படி நடக்கக்கூடாது. ஆனால், அவர் அதை சிறப்பாக கையாண்டார். ஹர்திக் பாண்டியா கடினமான மனிதர். அவர் கடினமான சூழ்நிலையில் மின்னும் கிரிக்கெட்டர். காயம், குடும்பப் பிரச்னை, என பல பிரச்னைகளில் இருந்தார். ஆனால், அதையெல்லாம் தாண்டி சாதனகளைப் படைத்தார். 

தன்னம்பிக்கை உடையவர்...

கிரிக்கெட்டில் சிறந்தவர்களாக கடினமான சூழ்நிலைகளை தாண்ட வேண்டும். அவர் அதைச் செய்திருக்கிறார்.  ஹர்திக் பீல்டிங்கின்போது ஐ.பி.எல். நன்றாக இருக்கிறது. ஐ.பி.எல். மட்டுமல்ல கிரிக்கெட்டுமே நன்றாக இருக்கிறது. பாண்டியா மிகவும் தன்னம்பிக்கையான வீரர். மிகவும் நேர்மறையாக சிந்திப்பவர். அவரால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை உடையவர். அதுதான் அவரை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்துகிறது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து