முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழா்களை நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்கிறாா்: கனிமொழி குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      தமிழகம்
Kanimozhi

Source: provided

சென்னை: தமிழ்நாட்டையும், தமிழா்களை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஏளனம் செய்வதாக நாடாளுமன்ற திமுக குழு தலைவா் கனிமொழி குற்றச்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,  தமிழகத்தையும், தமிழ் மக்களையும் நீங்கள் (நிா்மலா சீதாராமன்) ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிா்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவா்களின் நிலை என்ன என்பதை நிதியமைச்சா் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.  தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்துக்கு உரியதாக தோன்றுகிறதா? தமிழா்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழக மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அவா் கூறியுள்ளாா்.

சென்னையில் நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நிா்மலா சீதாராமன், நாங்க இவ்வளவு பணம் கொடுக்கிறோம், நீங்கள் என்ன கொடுக்கிறீர்கள் என்ற வாதமே தவறு. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆதாயம் அடைவதற்காக தமிழக மக்களின் உணா்ச்சிகளை தி.மு.க. அரசு தூண்டி விடுவதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், கனிமொழி அவ்வாறு கூறியுள்ளாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து