முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் வீரர் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      விளையாட்டு
CSK 2024-03-11

Source: provided

சி.எஸ்.கே. அணியில் முதல்முறையாக விளையாடும் நூர் அஹமது சிறப்பான சுழல் பந்துவிச்சாளராக இருக்கிறார். சேப்பாக்கில் ’ஸ்பின் டிரையோ’ எனப்படும் அஸ்வின், ஜடேஜா, நூர் அஹமது இருக்கிறார்கள். மேலும் ரச்சின் ரவீந்திராவும் அணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலக ருதுராஜ் அந்தப் பொறுப்பை ஏற்றார். 

இந்நிலையில் நூர் அஹமது பேசியதாவது: வணக்கம். அனைவருக்கும் நன்றாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். ஐ.பி.எல். என்பது நன்றாக தொடங்குவது முக்கியம். அதனால் உங்களது ஆதரவு எங்களுக்கு வேண்டும். போட்டியை ரசித்து பாருங்கள். சி.எஸ்.கே. அணிக்கு விசில் போடுங்கள் என்றார்.

லக்னோ அணியில் தாக்குர்

ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் (மார்ச் 22) கொல்கத்தாவில் தொடங்கியது. இந்தப் போட்டியில் ஆர்.சி.பி. அபார வெற்றி பெற்றது. லக்னோ அணிக்கு புதிய கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். லக்னோ அணி தனது முதல் போட்டியில் டில்லி கேபிடல்ஸுடன் இன்று மோதுகிறது.

இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் மோஷின் கான், மயாங் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளார்கள். ஐ.பி.எல்.லில் இதுவரை 94 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷர்துல் தாக்குர், பேட்டிங்கில் 307 ரன்கள் குவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான ஷர்துல் தாக்குர் 11 டெஸ்ட், 47 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ச்சரின் மோசமான சாதனை

ஐ.பி.எல்.  வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் 6 ஓவரில் 94 ரன்கள் அடுத்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் குவித்தது. இதுதான் ஒரு அணியின் 2ஆவது அதிகபட்ச ரன்களாகும். 

இதில் ராஜஸ்தானின் நட்சத்திர வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3, தீக்‌ஷனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

தொடரை வென்றது நியூசி.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. 4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அபாரமாக விளையாடி 220 ரன்கள் குவித்துள்ளது. நியூசி. சார்பில் பின் ஆலன் 50, ஷெப்பர்ட் 44, பிரேஸ்வெல் 46 ரன்கள் குவித்தார்கள். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

தனியாளாக போராடிய அப்துல் சமத் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜேக்கப் டபி 4, ஜகரி பௌல்க்ஸ் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 3-1 என தொடரை வென்றது நியூசிலாந்து. மீதம் ஒரு டி20 போட்டியுள்ளது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற விருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து