முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் செயின் பறிப்பு சம்பவம்: 3-வது நபர் ஆந்திராவில் கைது

புதன்கிழமை, 26 மார்ச் 2025      தமிழகம்
Jail

Source: provided

சென்னை : செயின் பறிப்பு சம்பவத்தில் ஜாபர் குலாம் ஹுசைன் என்பவர் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.;

சென்னை அடையார் மாவட்ட போலீசாருக்கு நேற்று முன்தினம் காலைப்பொழுது சோதனையாக அமைந்தது. இந்த போலீஸ் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இடங்களில் தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின.

இந்தநிலையில் சென்னையில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3-வது கொள்ளையன் பெண்களிடம் பறித்த நகைகளுடன் ரெயிலில் தப்பி செல்லும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆந்திரா ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொள்ளையன் தப்பி சென்ற ரெயில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிறுத்தப்பட்டது. தப்பி சென்ற 3-வது கொள்ளையனான சல்மானை ஓங்கோல் பகுதியில் வைத்து ஆந்திர ரெயில்வே போலீசார் கைது செய்து சென்னை போலீசிடம் ஒப்படைத்தனர். சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஜாபர் குலாம் ஹூசைன் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். திருடிய நகைகளை மீட்க அழைத்துச் சென்றபோது போலீஸாரை துப்பாக்கியால் சுட முயன்றதால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பலியான ஜாபர் குலாம் உடல் ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஜாபர் குலாம் பயன்படுத்திய டூவீலர், கைத் துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னையில் காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின் 4ஆவது என்கவுன்டர் நடைபெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து