எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: தடைக்கற்கள் உண்டென்றாலும் தடந்தோளுண்டு’ என்று பாடிய புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை நெஞ்சில் ஏந்தி, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு நம் பாதையில் தடைக்கற்களை அள்ளி அள்ளிப் போட்டாலும், அதனை எதிர்கொள்ளும் தடந்தோள்களுடனும் வலிமை மிக்க கால்களுடனும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம் மக்கள் நலன் காக்கும் சாதனைத் திட்டங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கவிதை வரிகளால் நமக்கு உணர்வூட்டிய திராவிடக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடெங்கும் அரசின் சார்பில் தமிழ்க் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் சட்டப்பேரவையில் எந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் அது முந்தைய ஆட்சியைப் போல வெறும் மேசையைத் தட்டுவதற்கான அறிவிப்பாக மட்டும் இருப்பதில்லை. அறிவிக்கப்பட்டவை செயல்வடிவம் பெறவேண்டும் என்ற உறுதியுடன், கடைக்கோடி கிராமம் வரை அது சென்று சேரும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் ஓய்வதில்லை.
தமிழ்நாடு அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்களுக்குப் பலன் தரும் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், அந்தந்த துறை சார்பிலான மானியக் கோரிக்கைகளுடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஏறத்தாழ ஒன்றரை மாதங்கள் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு துறையைச் சார்ந்த அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்த திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டதுடன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்காக ஒவ்வொரு துறைக்கும் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் பதிலுரைகள் அளித்து, பலவற்றை நிறைவேற்றிடவும் உறுதி அளித்துள்ளனர்.
ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகள் தொடர்பான சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நடைபெறும் இந்த வழக்கமான நடவடிக்கைகள் மட்டுமின்றி, இந்தக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல நிகழ்வுகள் நிறைவேறியும் பதிவாகியும் உள்ளன. மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநரின் செயலுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ஆளுநரின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் அனைத்தையும் ஆளுநர்களின் எதேச்சாதிகாரப் பிடியிலிருந்து மீட்டெடுக்கக் கூடிய பல முக்கிய அம்சங்களையும் தீர்ப்புரையில் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள், குறிப்பாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துள்ள மாநிலங்கள் செயல்படுத்தும் திராவிட மாடல் அரசின் திட்டம் என்பது குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கும் திட்டம். தமிழ்நாட்டில் முதன்முறையாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் மூலமாக 1 கோடியே 16 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன் பெற்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தில் மேலும் பயன் கிடைக்கவேண்டிய தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான அறிவிப்பையும் இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியிட்டுள்ளேன். இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் முகாம்கள் நடத்தப்படவிருக்கின்றன.
நன்மைகள் தரும் அறிவிப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டதுடன், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் போன்ற தீமைகளைத் தடுக்கும் வகையிலான தீர்மானங்களையும் திராவிட மாடல் அரசின் இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளோம். மாநில உரிமைகளுக்கான குரலை நாம் ஓங்கி ஒலிக்கும் நிலையில், இந்தியாவின் ஒருமைப்பாடும் நாட்டின் பாதுகாப்பும் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்ற இதயப்பூர்வமான அக்கறையுடன் காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, மத்தியஅரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் என்ற தீர்மானத்தையும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளோம்.
தேசபக்தி என்பது நமக்குத் தேர்தல் அரசியல் முழக்கமல்ல. மாநில உரிமைகளுடனான கூட்டுறவுக் கூட்டாட்சி மிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தியாகும். அரசியல் சட்ட மாண்பினைக் காக்கும் செயல்பாட்டுடன் இந்தியாவின் பாதுகாவலனாகவும், தமிழ்நாட்டிற்குள் மதவாத அரசியல் தலையெடுக்காமல் தடுக்கும் அரணாகவும் உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் இறுதி வரை உறுதியாக நிற்பேன். கூட்டத் தொடர் நிறைவடைந்த நாளில், எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு வராதததால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் தோழமைக் கட்சி உறுப்பினர்களுக்கும் கை குலுக்கி நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.
ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளாக ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் நான் குறிப்பிட்டேன். “மேலே பாம்பு, கீழே நரிகள், குதித்தால் அகழி, ஓடினால் மதில் சுவர்கள் என்பது போல ஒரு பக்கம் மத்திய அரசு, மறுபக்கம் ஆளுநர், நிதி நெருக்கடி எனப் பல தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வருகிறோம்” என்று. திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்கொள்ளாத நெருக்கடிகள் இல்லை. சந்திக்காத சவால்கள் கிடையாது. சாதிக்காத திட்டங்கள் கிடையாது. இதை உடன்பிறப்புகளான நீங்கள் இத்தனை காலம் உணர்ந்திருப்பதுபோல, இப்போது பொதுமக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க என்பது தமிழ்நாட்டின் நலனை மட்டுமின்றி, இந்தியாவின் ஜனநாயகத்தையும் காக்கின்ற இயக்கம் என்பதை எதிரிகளின் மனசாட்சியும் சொல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம்: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
11 Dec 2025சென்னை, தமிழகத்தில் விடுப்பட்ட மகளிருக்கு 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்க வாய்ப்பு உள்ளது: திருமாவளவன்
11 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.
-
தமிழ் கவிஞர் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
11 Dec 2025சென்னை, தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐ.நா. ரூ.316 கோடி நிதியுதவி
11 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்திப்பு
11 Dec 2025சென்னை, சென்னையில் த.வெ.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசி கொண்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
காசா அமைதி திட்டத்திற்கு ஆதரவை அளித்த இந்தியா பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை
11 Dec 2025புதுடெல்லி, காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரால் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
-
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: மக்களவையில் தி.மு.க. கோரிக்கை
11 Dec 2025புதுடெல்லி, கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் தி.மு.க. எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
-
திபெத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
11 Dec 2025பீஜிங், திபெத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4, 5 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் பிணையப் பத்திரங்கள் ஏலம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
11 Dec 2025சென்னை, ரூ.5000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடுவதா தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
11 Dec 2025புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாளை உண்ணாவிரதம்: நிபந்தனைகளுடன் ஐகோர்ட் கிளை அனுமதி
11 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து வருகிற 13-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
-
கூட்டணி விவகாரத்தில் விஜய்க்கு முழு அதிகாரம்: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள்
11 Dec 2025சென்னை, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
வெண்கலம் வென்றது இந்தியா
11 Dec 2025சென்னை, 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? பி.டி.செல்வகுமார் விளக்கம்
11 Dec 2025சென்னை, நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார்.
-
பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் உக்ரைனில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: அதிபர் ட்ரம்புக்கு ஜெலன்ஸ்கி பதிலடி
11 Dec 2025கீவ், உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி என்று அதிபர் ட்ரம்ப் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தா
-
டிசம்பர் 14 முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் விநியோகம்: அன்புமணி அறிவிப்பு
11 Dec 2025சென்னை, வருகிற 14-ம் தேதி முதல் பா.ம.க.வில் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று அன்புமணி தெரிவித்தார்.
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
11 Dec 2025சென்னை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க 3 நாட்கள் கால அவகாசம்: வரும் 14-ம் தேதி வரை வழங்கலாம் - தேர்தல் ஆணையம்
11 Dec 2025சென்னை, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க காலஅவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
டி-20 கிரிக்கெட் போட்டி: 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் புதிய மைல்கல்
11 Dec 2025நியூ சண்டிகர், டி-20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் பாண்ட்யா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அபார வெற்றி...
-
தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் ஈ.வி.எம். சரிபார்ப்பு பணி துவக்கம்
11 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் 1.50 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
-
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 Dec 2025சென்னை, சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர ஐ.நா. விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட பெண்களுக்கு மம்தா அழைப்பு
11 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறித்து கடுமையாக விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025



