முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜ.க. அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

வியாழக்கிழமை, 15 மே 2025      இந்தியா
Supreme-Court 2024-11-269

புதுடெல்லி,  அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டித்துள்ளார்.

இந்திய ராணுவ அதிகாரி கர்னல் சோபியா குரேஷி குறித்த மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷாவின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது.  

விஜய் ஷாவின் கருத்து குறித்து கேள்வியெழுப்பிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்,  அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேளுங்கள்.” என்று தெரிவித்தார்.

“ஒரு நாளில் உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும்.” என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், கைது செய்யப்படுவதிலிருந்து இடைக்கால பாதுகாப்பு கோரிய விஜய் ஷாவின் மனுவையும் நிராகரித்தது. மேலும், விஜய் ஷாவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கவும் சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. அமைச்சர் விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

முன்னதாக, மே 12-ம் தேதி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் விஜய் ஷா, “அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம் அவர்களின் சகோதரியை அனுப்பி பழிவாங்கினோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து