முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்சோ சிறப்பு நீதிமன்றங்களுக்கு முன்னுரிமை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 15 மே 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடில்லி: குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க போக்சோ சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் நாடு முழுவதும் அதிகரித்து வருவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பெலா எம். திரிவேதி மற்றும் பி.பி. வரலே அமர்வு கூறியதாவது: போக்சோ வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள், அதன் தீவிரத்தை உணர செய்யவும், போக்சோ வழக்குகளை விசாரிப்பதற்கு என தனி நீதிமன்றங்கள் அமைப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டு உள்ள காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும்.

மத்திய அரசு நிதியுதவி உடன், பல மாநிலங்கள் போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து இருந்தாலும், தமிழகம், பீஹார், உ.பி., மேற்கு வங்கம், ஒடிசா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், போக்சோ நீதிமன்றங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து