Idhayam Matrimony

லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம்: கலிபோர்னியா மாகாண கவர்னர் அதிபர் ட்ரம்ப் பரஸ்பர குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      உலகம்
trump 2024-12-30

Source: provided

லாஸ் ஏஞ்சல்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டம் தொடர்பாக கலிபோர்னியா மாகாண கவர்னர் மற்றும் அதிபர் ட்ரம்ப் இருவரும் பரஸ்பர குற்றச்சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் தீவிரமாக எடுத்து வருகிறார். இதனையொட்டி ஏராளமானோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். இதில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுகிறார்கள்.

இதற்கிடையே அதிபர் டிரம்பின் நடவடிக்கையை கண்டித்து கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போராட்டத்தை போலீசாரால் கட்டுப்படுத்த முடியாததால் தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அனுப்பப்பட்டனர். ஆனாலும் கலவரம் கட்டுக்குள் வரவில்லை.லாஸ் ஏஞ்சல்சில் 4-வது நாளாக போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் கலவரத்தால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள், கலவரத்தை ஒடுக்க கூடுதலாக தேசிய படையை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்களை அனுப்ப அதிபர் டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் நடந்து வரும் போராட்டங்கள் தொடர்பாக அதிபர் டிரம்ப் மற்றும் கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கவர்னர் கவின் நியூசம், "லாஸ் ஏஞ்சல்சுக்கு தேசிய படையை அனுப்பிய டிரம்பின் நடவடிக்கை பொறுப்பற்றதாகும். இது எங்கள் துருப்புக்களுக்கு அவமரியாதை அளிப்பதாக உள்ளது. கலிபோர்னியா கவர்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் என யாரையும் கேட்காமல், தன்னிச்சையாக தேசிய படைகளை அனுப்பி உள்ளார். இது சட்டவிரோதமானது. கலிபோர்னியா மாகாணத்தின் இறையாண்மையை பறிக்கும் செயலாகும். இதுதொடர்பாக டிரம்ப் மீது வழக்கு தொடருவோம். டிரம்ப் சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய டிரம்ப், கலவரங்களைச் சமாளிக்க தேசிய காவல்படை துருப்புக்களை அனுப்பி இருக்காவிட்டால் லாஸ் ஏஞ்சல்ஸ் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும். இதற்கு கவர்னர், மேயர் எனக்கு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் கவர்னர் விமர்சனம் செய்து வருகிறார். அவரை கைது செய்ய கூட நான் பரிந்துரைப்பேன். கவர்னர் கவின் நியூசம் விளம்பரத்தை விரும்புகிறார். அவர் மிகவும் திறமையற்றவர் என்பது அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து