எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழகம்தான் இருக்கிறது என்றும், இந்தியாவிற்கே தமிழ்நாடுதான் தலைமையாக திகழ்கிறது என்றும் சென்னை தரமணியில் உலகளாவிய வணிக மையத் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
1971-ம் ஆண்டு முதல்...
சென்னை, தரமணியில் உலக வங்கியின் உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூன் 10) திறந்துவைத்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “உலக வங்கியுடன் நம்முடைய பார்ட்னர்ஷிப் 1971-ம் ஆண்டு தமிழ்நாடு விவசாயக் கடன் திட்டத்தில் தொடங்கியது. அப்போது இருந்து, தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. குறிப்பாக, 2022-ம் ஆண்டில், புதுடெல்லிக்கு வெளியே தன்னுடைய முதல் மண்டல அலுவலகத்தை உலக வங்கி சென்னையில்தான் அமைத்தார்கள்.
நீண்ட நெடிய உறவு...
செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு உதவி செய்து, வேகமான மற்றும் வலுவான ஒருங்கிணைப்புக்கும் வழி ஏற்படுத்தி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவுடனான உலக வங்கியின் உறவை இந்த அலுவலகம் மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.உலக வங்கியுடனான நம்முடைய இந்த நீண்ட நெடிய உறவு பல்வேறு துறைகளில் பல நற்பலன்களை வழங்கியிருக்கிறது. முக்கியமான சிலவற்றை மட்டும் நான் பட்டியிலிட விரும்புகிறேன்.
இரண்டு துறைகளில்...
1980-ம் ஆண்டு மற்றும் 1990-ம் ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ‘தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம்’ மற்றும் 2004-ம் ஆண்டிலும் 2010-ம் ஆண்டிலும் செயல்பாட்டில் இருந்த தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம். இந்த இரண்டும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்களில் முன்னேற்றம் காண சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது. இன்றைக்கு தமிழ்நாடு இந்தத் துறைகளில் இந்தியாவிற்கே லீடர் என்று சொல்லக்கூடிய இடத்தை அடைந்திருக்கிறது.
‘வாழ்ந்து காட்டுவோம்’...
அடுத்து, வறுமையை ஒழித்து ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செயல்படுத்தப்பட்ட ‘வாழ்ந்து காட்டுவோம்’ எனும் முன்மாதிரி திட்டம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இதனால் முன்னேறி இருக்கிறார்கள். பெண்களுக்கான அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், உழவர்களுக்கு நிலைத்த சமுதாயக் கட்டமைப்புகளையும் இந்தத் திட்டம் உருவாக்கி தந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுய உதவிக் குழுக்களை ஊக்கப்படுத்தி பெண்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு தரவை நான் சொல்ல விரும்புகிறேன்.
புதிய வேலைவாய்ப்புகள்...
பெண்கள் தலைமையேற்று நடத்தக்கூடிய 8 ஆயிரத்து 400 நிறுவனங்களுக்கு 2022-ஆம் ஆண்டிலிருந்து 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை 267 கோடி ரூபாய்க்கு இந்தத் திட்டம் மூலம் கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஊரகப் பகுதிகளில், 1 லட்சம் பேர் புதிய தொழில்கள் தொடங்கவும், 53 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்தத் திட்டம் சாதனை படைத்திருக்கிறது. அதேபோன்று, பணிபுரியும் பெண்களுக்காக தமிழ்நாடு முழுவதும் நாம் தொடங்கி வரும் தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு இருக்கிறது. கூடிய விரைவில், சென்னையில் தாழ்தள எலெக்ட்ரிக் பேருந்துகள் இயங்கப்போகிறது. அதற்கான திட்டத்திலும் உலக வங்கி நமக்காக உதவியிருக்கிறார்கள்.
பெரும்பங்கு...
3 கட்டமாக செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலமாக, நம்முடைய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதில், உலக வங்கி பெரிய அளவில் உதவியிருப்பதுடன், இந்தியா முழுவதும் செயல்படுத்துவதற்கான மாடலாக தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் வெற்றியடைந்திருக்கிறது என்று பாராட்டியும் இருக்கிறார்கள். தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 750 கி.மீ. சாலைகளை மேம்படுத்தி, விபத்துத் தடுப்பு பகுதிகள் உட்பட பல்வேறு பராமரிப்பு பணிகளை 2 ஆயிரம் கி.மீ. சாலைகளில் மேற்கொள்ள உதவியிருக்கிறது.
பேரிடர்களால்...
தமிழ்நாடு நீர்வள - நிலவள திட்டமானது நீர்ப்பாசனத் துறையின் நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கு வித்திட்டிருக்கிறது. இதனால், வேளாண்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. மிகப்பெரிய கடலோர பரப்பைக் கொண்டிருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், புயல் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. அதற்கு உதவுகின்ற வகையில், ‘தமிழ்நாடு கடலோர பேரிடர் துயர் தணிப்புத் திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு, பேரிடர்களை தாங்கக்கூடிய உட்கட்டமைப்புகளையும், முன்கூட்டியே எச்சரிக்கை தரக்கூடிய அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறோம்.
பெண்களின் பங்களிப்பு...
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்றால் அது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் முடியவே முடியாது. தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே பெண்கள்தான். விவசாயம் அல்லாத, வளர்ந்து வரும் துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 185 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி உதவியுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.
பார்ட்னர்ஷிப் தொடர...
இரண்டாவதாக, தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் திட்டம். மூன்றாவதாக, தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம். உலக வங்கியுடன் சேர்ந்து இப்படி இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற என்னுடைய அரசு ஆர்வமாக இருக்கிறது. அதற்கு நம்முடைய பார்ட்னர்ஷிப் தொடர வேண்டும்.
வளர்ச்சி இன்ஜினாக...
9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி.பி. 36 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2030-இல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று ஒரு பெரிய இலக்குடன் தமிழ்நாடு பயணிப்பது என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். அந்த இலக்கை அடைவதில் உலக வங்கியுடனான நம்முடைய உறவு வெறும் கடனுதவி சார்ந்தது மட்டுமல்ல. டெக்னாலஜி, கொள்கை உருவாக்கம் மற்றும் அறிவு சார்ந்த ஒரு பார்ட்னர்ஷிப் ஆக தான் இதை நான் பார்க்கிறேன்.
உலக வங்கி உதவும்...
குறிப்பாக, காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கைகள், எஸ்.டி.ஜி. இலக்குகள், மகளிருக்கான அதிகாரம் வழங்குதல் ஆகிய இலக்குகளை எட்டுவதில் உலக வங்கியின் உதவி இன்றியமையாதது. நம்முடைய இலக்கை அடையச் செய்வதில் இருக்கும் சில சவால்களையும் நாம் யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக, வளர்ச்சி கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 முதல் 7 விழுக்காடு என்று அதிக அளவில் இருக்கிறது. வரும் காலங்களில், புதுமையான மாற்றுதலுக்குரிய கடனுதவியை வழங்கி, மக்களுக்கு தேவையான சமூக - பொருளாதார மேம்பாட்டு தேவைகளுக்கான முதலீடுகளுக்கு உலக வங்கி உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.
இணைந்து செயல்படும்...
நீண்ட கால இலக்குகளை எட்டுவதில், ஒரு மாடல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க உலக வங்கியுடன் தமிழக அரசு தொடர்ந்து இணைந்து செயல்படும். நம்முடைய இந்தப் பயணம் புதுமை, சமூக பொருளாதார சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சி என்கிற இலக்கில் நிச்சயம் வெற்றியடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை: அமைச்சர்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமை தொகையை விமர்சிக்க பா.ஜ.க.வுக்கு தகுதியில்லை என்றும், சூரியனை எந்த கையாலும் மறைக்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
தங்கம், வெள்ளி விலை குறைவு
13 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வெள்ளிக்கிழமை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை காலை சவரனுக்கு ரூ.
-
மகளிர் உரிமைத்தொகை குறித்த அரசின் அறிவிப்பால் வங்கிகளில் அலைமோதிய பெண்கள் கூட்டம்
13 Feb 2026சென்னை, தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் நேற்று அலைமோதிய பெண்கள் கூட்டத்தால் வங்கி ஊழியர்கள் திணறினர்.
-
தமிழகத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் மற்றும் சிறப்பு தொகை ரூ.2,000 உள்பட 1.31 கோடி மகளிர் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு: திராவிட மாடல் 2.0 ஆட்சிக்காலத்தில் உரிமை தொகை ரூ.2,000 ஆக மேலும் உயர்த்தப்படும்
13 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகையாக ரூ. 5,000 நேற்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.
-
பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வான 9,801 பேருக்கு புதிதாக பணிநியமன ஆணைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந
-
இன்று காதலர் தினம்: ரோஜா பூக்களின் விலை கடும் உயர்வு
13 Feb 2026போரூர், நாடு முழுவதும் இன்று காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரோஜா பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது.
-
தோல்வி பயத்தால் ரூ.2000 தருவதாக முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
13 Feb 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் தோல்வி பயத்தால் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையை அதிகரித்துள்ளார் என்று அ.தி.மு.க.
-
விஜய் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
13 Feb 2026சேலம், சேலத்தில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கம் அடைந்த நபர் திடீர் என்று உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருவண்ணாமலையில் சோகம்: வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழப்பு
13 Feb 2026திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் வீடு இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது: ஐகோர்ட்
13 Feb 2026சென்னை, முதல் மனைவி இறந்துவிட்டால் 2-வது மனைவிக்கு ஓய்வூதியம் வழங்க முடியாது என்று உயர் நீதமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளத
-
மோடியின் அரசியல் வாழ்க்கை: வைரலான அதிபர் ட்ரம்ப் பேச்சு
13 Feb 2026நியூயார்க், பிரதமர் நரேந்திர மோடியின் "அரசியல் வாழ்க்கையை அழிக்க நான் விரும்பவில்லை" என கடந்தாண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைர
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
13 Feb 2026பலூசிஸ்தான், பாகிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
-
காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்
13 Feb 2026சென்னை, காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை சார்பில் ரூ. 115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Feb 2026- இராமேசுவரம் சுவாமி அம்பாள் முத்தங்கி சேவை, இரவு ங்க பல்லக்கில் புறப்பாடு,
- திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம்
- புஷ்ப பல்லக்கில் பவனி.
- இராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவ
-
இன்றைய நாள் எப்படி?
13 Feb 2026


