எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாஷிங்டன் : விண்வெளிக்கு செல்லும் முன்பு சுபான்ஷூ சுக்லா ஏ,ஆர், ரகுமான் பாடலை விரும்பி கேட்டார்.
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து கடந்த 2022-ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. இது உலகின் முதல் தனியார் விண்கலம் ஆகும். அந்த வகையில் ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.
இதற்கான பணிகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 'பால்கன்-9' ராக்கெட் மூலம், நேற்று மதியம் 12.01 மணிக்கு 'ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைகிறது.
விண்வெளிப் பயணத்தின் துவக்கத்தின்போது "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.." என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா முழங்கி, தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், சுபான்ஷூ சுக்லா விண்வெளிக்கு புறப்படுவதற்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பாடலை விரும்பி கேட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'யூஹி சலா சல் ராஹி' என்ற இந்தி பாடல் சுபான்ஷூ சுக்லாவின் விருப்ப பாடலாக இருந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'சுவதேஸ்' என்ற பாலிவுட் திரைப்படத்தில் இந்த பாடல் இடம்பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பின்னணி பாடகர்கள் உதித் நாராயணன், ஹரிஹரன் ஆகியோர் இணைந்து பாடிய இந்த பாடல் தற்போது இணையத்தில் மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


