முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத யாத்திரையில் 3 பக்தர்கள் பலி: மன்னிப்பு கோரிய முதல்வர் மாஞ்சி

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2025      இந்தியா
Otisha 2025-06-29

Source: provided

புவனேஸ்வர் : ரத யாத்திரையில் 3 பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு ஒடிசா முதல்வர் மாஞ்சி மன்னிப்பு கோரியுள்ளார்.

புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து புரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் எஸ் ஸ்வெயின் கூறுகையில், “ரத யாத்திரையை ஒட்டி அதிகாலை 4 முதல் 4.30 மணிக்குள் ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே, கூட்டம் குவிந்தது. எதிர்பாராத வகையில் கூட்டம் திரண்டதால் நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ப்ரவிதா தாஸ் (52), பிரேம் கந்தா (52), பசந்தி சாஹு (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கூட்ட மேலாண்மையில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.” என்றார்.

மன்னிப்பு கோரிய முதல்வர்: இந்த விபத்து குறித்து ஒடிசா முதல்வர் சரண் மாஞ்சி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பக்தர்கள் மத்தியில் மஹாபிரபுவையும், சாரதாபாலியையும் காண வேண்டி ஏற்பட்ட அதீத ஆர்வத்தால், துரதிர்ஷ்டவசமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்துக்காக நானும், எனது அரசாங்கமும் ஜெகநாதர் பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து