முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்

புதன்கிழமை, 23 ஜூலை 2025      தமிழகம்
CM-1 2025-07-23

Source: provided

சென்னை : மருத்துவமனையில் இருந்தபடியே நேற்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகள் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், உங்களுடன் ஸ்டாலின் திட்ட பயனாளிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பொழுது அவர்களை அறிவுறுத்தினார்.

திடீர் உடல்நலக்குறைவு...

முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களுக்கு முன் காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால், அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசுப் பணிகள் குறித்து... 

3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், முதல்வர்  அங்கு தங்கியுள்ளார். இதற்கிடையில், முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் இருந்தபடியே அரசுப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 15-ம் தேதியன்று தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

2-வது நாளாக.... 

இந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் மருத்துவமனையில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களுடன் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். ஸ்ரீபெரும்புத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் கலந்து கொண்ட மக்களிடம் குறைகளை கேட்டும், அவர்களுக்கு தீர்வு கிடைத்தது குறித்தும் முதல்வர்  கேட்டறிந்தார். அப்போது பயணாளிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

பணிகளின் முன்னேற்றம்... 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- முதல்வர்  மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்.அழகு மீனா, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.

முதல்வர் அறிவுறுத்தல்...

இந்த ஆய்வின்போது, முதல்வர்  மு.க. ஸ்டாலின் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, இதுவரை அம்மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பயனாளர்கள் நன்றி...

அத்துடன் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனுக்கள் அளிக்க வருகை தந்த பயனாளிகளிடம் முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் கலந்து கொண்டு பயனடைந்த பயனாளிகள் முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கோப்புகளுக்கு ஒப்புதல்...

மேலும், அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். இந்நிகழ்வின் போது, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்தபடியே உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்.

- முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து