முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

புதன்கிழமை, 23 ஜூலை 2025      தமிழகம்      அரசியல்
EPS-2025-07-23

ஓரத்தநாடு. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அ.தி.மு.க.  பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. நேற்று ஒரத்தநாடு, பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார்.

முதல் சந்திப்பாக ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே நடந்த கூட்டத்தில் அவர் பேசுகையில்., கூட்டணி பலம் இருக்கிறது என்று ஸ்டாலின் சொல்கிறார். 200 தொகுதிகள் வெல்லும் என்கிறார். ஸ்டாலின் அவர்களே ஒரத்தநாடு வந்து பாருங்க. பூமியே குலுங்கும் அளவுக்கு மக்கள் கூட்டம். நீங்கள் எப்படி வெல்வீர்கள்? அ.தி.மு.க.  கூட்டணி 210 தொகுதிகளில் கண்டிப்பாக வெல்லும். விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவு சென்றுவிட்டது. மக்கள் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். கட்டுமானப் பொருட்கள் விலையும் அபரிமிதமாக ஏறிவிட்டது. இனிமேல் யாரும் வீடுகட்ட முடியுமா? 

எடப்பாடி பழனிசாமி கூவிக்கூவி அழைக்கிறார், யாரும் வரவில்லை என்று துரைமுருகன் சொல்கிறார். துரைமுருகன் அவர்களே உங்களுடைய கூட்டணி எந்த நிலையில் உள்ளது என்பதை முதலில் பாருங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கமும் இழுத்துக்கொண்டு இருக்கிறார்கள். எப்போது உடையும் என்றே தெரியவில்லை அதை முதலில் பாருங்கள். 

காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது, பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருந்தோம். ஆனாலும் 22 நாட்கள் அவையை ஒத்திவைச்சோம். அது அ.தி.மு.க.  திறமை, மக்கள் மீதான அக்கறை. 39 எம்பிக்களை வைத்து ஏன் குரல் கொடுக்கவில்லை..? ஏனென்றால் மக்கள் மீது அக்கறையில்லை. மக்கள் பிரச்னையை தீர்ப்பதில் எப்போதும் முதல் கட்சியாக அ.தி.மு.க. வே இருக்கிறது. 

அ.தி.மு.க.  பா.ஜ.க. கூட்டணியை பார்த்து திமுகவினருக்கு பயம் வந்துவிட்டது, ஏதாவது குழப்பம் ஏற்படுத்தி எங்கள் கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்கள். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. வலிமையான வெற்றிக்கூட்டணி. அ.தி.மு.க.  தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து