முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு பாதுகாப்பில்லை: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்

புதன்கிழமை, 23 ஜூலை 2025      சினிமா
Dhanushree-Dutta 2025-07-23

Source: provided

டெல்லி : என் வீட்டுக்குள்ளேயே எனக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிக்கை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் வீடியோ சமுகவரையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது சொந்த வீட்டுக்குள்ளேயே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கண்ணீர் மல்க தனது துயரைப் பதிவு செய்துள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழில் விஷால் ஜோடியாக, ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. கடந்த 2018-ம் வருடம் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் தனுஸ்ரீ தத்தா. ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்தபோது நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீஸில் புகார் கொடுத்தார். இந்தியாவில் முதன்முதலாக, மீ டூ-வில் பாலியல் புகார் கூறியிருந்தது இவர்தான். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள வீடியோவில், தனது சொந்த வீட்டுக்குள்ளேயே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கண்ணீர் மல்க, குரல் நடுங்க கூறியிருப்பதாவது: 2018-ல் மீ டூ-வில் பாலியல் புகார் கூறியது முதல் இதுவரை நான் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறேன். எனது வீட்டிலேயே நான் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறேன். எனக்கு நடக்கும் துன்புறுத்தல்களை நான் போலீஸாரை தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அவர்கள் காவல் நிலையம் வந்து முறைப்படி புகார் கொடுக்குமாறு கூறினர். நான் புகார் அளிக்கலாம் என்று இருக்கிறேன். என் உடல்நிலை சரியில்லை. கடந்த 4, 5 ஆண்டுகளாகவே நான் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து