முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்தார் கே.எல்.ராகுல்

புதன்கிழமை, 23 ஜூலை 2025      விளையாட்டு
KL-Rahul 2023-08-29

Source: provided

லண்டன் : இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான நேற்று கே.எல்.ராகுல் 59 பந்தில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து மண்ணில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் அவர் இணைந்தார்.

4-வது டெஸ்ட்...

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

ஆயிரம் ரன்களை... 

ஜெய்ஸ்வால் சற்று தடுமாற, கே.எல். ராகுல் நேர்த்தியாக விளையாடினார். 18 ஓவர் வரை இருவரும் விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர். கே.எல்.ராகுல் 59 பந்தில் 32 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்டில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய வீரர்களான சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் 1000 ரன்களை கடந்துள்ளனர். தற்போது அவர்கள் பட்டியலில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து