முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூமாப்பட்டி பிளவக்கல் அணையின் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.10 கோடியில் நிதி ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Koomapatti

Source: provided

கூமாப்பட்டி: கூமாப்பட்டி பிளவக்கல் அணையின் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.10 கோடியில்  நிதியை தமிழக அரசு  ஒதுக்கீடு செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் கூமாபட்டி. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கைச் சூழல் நிறைந்த கிராமமான கூமாப்பட்டி என்ற கிராமம், தங்கப்பாண்டி என்பவரின் இன்ஸ்டாகிராம் ரீல்சால் படுபயங்கர ட்ரண்ட் ஆனது. "ஏங்க.. ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. சொர்க்க பூமிங்க.. தண்ணிய பாருங்க.. ஏங்க சர்பத் மாதிரி, பவண்டோ, செவன்-அப் மாதிரி இருக்குங்க.. தென் மாவட்டத்தில் கூமாப்பட்டி தனி ஐலேண்டு என அவர் பேசி வெளியிட்ட ரீல்ஸ் வெளியிட்டார்.

இந்த ரீல்சை கண்டு கூமாப்பட்டிக்கு வெளியூர் நபர்களும் படையெடுத்தனர். கூமாபட்டி கிராமத்தில் பிளவக்கல் அணை, கோவில் ஆறு அணை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாகும். பிளவக்கல் அணை பகுதியில் வெளிநபர்களுக்கு அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை அறிவித்தது.

பிளவக்கல் பெரியாறு அணை, பூங்கா

பிளவக்கல் பெரியாறு அணையின் அருகிலேயே பூங்காவும் உள்ளது. எனினும், கொரானா காரணமாக பொதுமக்கள் பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டு ஐந்து ஆண்டு காலம் ஆகியும் இன்னும் பூங்காவிற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பூங்கா பராமரிப்பு பணிகளுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்படாத நிலையில், பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதம் அடைந்தும் பூங்கா பாழடைந்தும் காணப்படுகிறது. இந்த பூங்காவை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

 நிதி ஒதுக்கீடு

இந்த நிலையில், கூமாப்பட்டி பிளவக்கல் அணையின் அருகில் உள்ள பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்பி பாயிண்ட் அமைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து