முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக குறைந்தது

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2025      தமிழகம்
vaigai dam-2023-05-04

Source: provided

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

தென்மேற்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கடந்த 5ம் தேதி அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது. வழக்கமாக அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும். ஆனால் இந்த ஆண்டு முழு கொள்ளளவான 71 அடிவரை நீர்மட்டத்தை நிலைநிறுத்த முடிவு செய்து நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 70 அடியை எட்டும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக 69 அடியிலேயே நீடித்தது.

தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 769 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. ஆனால் நீாவரத்து 634 கனஅடியாகவே உள்ளதால் அணையின் நீர்மட்டம் 68.83 அடியாக குறைந்துள்ளது. 5529 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.65 அடியாக உள்ளது. 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 619 கனஅடி நீர் வருகிறது. 5784 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. பெரியாறு 14, தேக்கடி 7.6 மழையளவு பதிவாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து