முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓணம் பண்டிகை எதிரொலி: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2025      தமிழகம்
Air-India

Source: provided

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை இன்று விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊரில் குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.

ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக உள்ளதால் பெருமளவிலான கேரள மாநில பொதுமக்கள், விமானங்களில் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதையடுத்து விமான கட்டணங்களும் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து உள்ளன. அதன்படி, சென்னை - திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.4,359ல் இருந்து ரூ.19,903ஆக அதிகரித்துள்ளது. சென்னை - கொச்சி இடையே விமான கட்டணம் ரூ.3,713ல் இருந்து ரூ.11,798ஆக அதிகரித்துள்ளது. அதைபோல சென்னை - கோழிக்கோடு இடையேயான விமான கட்டணம் ரூ.3,629ல் இருந்து ரூ.10,286ஆக உயர்ந்துள்ளது.

பயணிகள் விமான கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து