முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2025      தமிழகம்
EPS 2020 11-16

சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர்: 

பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கேள்விகள் கேட்டு பகுத்தறிவை விதைத்தார். உணர்வுகளைத் தட்டி உழுப்பி உரிமைக்காக போராடினார். சமத்துவ சமுதாயம் காண வயது கூடினும் தளராமல் உழைத்தார்.

யாருக்கும் யாரும் சிறியார் அல்ல என்றார். அதனாலேயே அவர் நம் பெரியார் என்றானார். பகுத்தறிவுப் பகலவனின் பிறந்தநாளில், அவர் வகுத்த சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்து, உண்மையான சமத்துவ ஆட்சியை அ.தி.மு.க. தலைமையில் 2026-ல் அமைத்திட உறுதியேற்போம், வாழ்க பெரியாரின் புகழ்” எனத் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி:

 வெளியிட்ட அறிக்கையில், “பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று (நேற்று). அவர் வகுத்துத் தந்த சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க இந்த நாளில் உறுதியேற்போம். சுயமரியாதையின் சின்னம் பெரியாரின் 147-ஆம் பிறந்தநாள் இன்று (நேற்று). தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாள். வன்னிய மக்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டம் இன்று தான் (நேற்று) தொடங்கியது. தமிழ்நாட்டின் சமூகநீதி நாளும் இன்று (நேற்று)தான். தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்குமான சமூகநீதியை வென்றெடுப்பதற்காக பெரியார் வகுத்துக் கொடுத்த சமூகநீதிப் பாதையில் பயணிக்கவும், போராடவும் இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்:

“சிந்தனையும் செயலும் சமூக நீதிக்காகவே என்று வாழ்ந்த பெரியார் பிறந்த நாள். சமூகத்தின் ஒடுக்கப்பட்ட தரப்பினரை வல்லினச் சொற்களால் வாழவைக்க வந்தவர். மூடத்தனத்தின் பாலும், பழைய அடிமைத் தனங்களை நோக்கியும் நாடே நகரத் தொடங்கிவிடுமோ என்னும் அச்சம் நிலவும் இந்நாளில் நமது பற்றுக்கோடு பெரியாரின் சொற்களே. அவர் வாழ்க. அவர் கற்றுத் தந்த நற்பாடங்கள் பரவுக” எனத் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுச்செயலாளர்:

டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “அடித்தட்டு மக்களின் வாழ்வியல் வழிகாட்டியாக, பகுத்தறிவை அனைவரின் உள்ளங்களிலும் புகுத்திய ஆளுமையாக, தமிழ்ச் சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் பெறச்செய்த ஒப்புயர்வற்ற தலைவர் பகுத்தறிவு பகலவன் பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று (நேற்று).

சாதியக் கொடுமைகளை, சமுதாய பேதங்களை, பெண் அடிமைத் தனத்தை வேரோடு களைய தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சுயமரியாதை சுடரொளி பெரியார் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஆற்றிய பெரும்பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து