முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2025      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக அமையும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புரிந்துணா்வு ஒப்பந்தம்...

தமிழகத்தில் தூத்துக்குடியில் இரு கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிர்வாகமும் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகமும் சில வாரங்களுக்கு முன்பு கையொப்பமிட்டன. இதன் மூலம் ரூ.30,000 கோடி முதலீடு செய்யப்பட்டு 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாக, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தார்.

10 ஆயிரத்திற்கும்...

மேலும் அவர் கூறுகையில், “கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும். முதல்கட்டமாக 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கப்படும். மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனமானது, ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக்கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. 

45 ஆயிரத்திற்கும்...

இது 45,000-க்கும் மேற்பட்டோருக்கு (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும். இந்த இரண்டு மிகப்பெரிய திட்டங்களும் சேர்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்க வழிவகுக்கும்” என்று டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

புதியதொரு அடித்தளம்...

இந்நிலையில் இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”சங்கப்பாடல்கள் சொல்லும் கப்பற்கலையில் தமிழரின் பெருமைமிகு வரலாற்றை. இப்போது, தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன. தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் புதியதொரு அடித்தளமாக இவை அமையும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து