முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு: வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2025      இந்தியா
Modi 2025-09-21

Source: provided

திருவனந்தபுரம் : தனக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நடிகர் மோகன்லால்  நன்றி தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன் லால்-க்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயரிய விருது வரும் 23ம் தேதி அன்று மோகன் லால்-க்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அசு அறிவித்துள்ளது. அதாவது, 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் மோகன் லால்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "திறமை மற்றும் நடிப்பு பன்முகத்தன்மையின் சின்னம் மோகன்லால். பல தசாப்தங்களாக நீடித்த தனித்துவமான கலை வாழ்க்கையைக் கொண்ட அவர், மலையாள சினிமா மற்றும் நாடகத்துறையில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார்.

மேலும், கேரள கலாச்சாரத்தின் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் சிறந்து விளங்கியுள்ளார். திரைப்படம் மற்றும் நாடக ஊடகங்களில் அவரது திறமை உண்மையான உத்வேகம் அளிக்கிறது. தாதாசாகேப் பால்கே விருது பெறுவதற்கு அவருக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனைகள் வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கட்டும்" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு மோகன்லால் நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவதில் நான் மிகவும் பணிவாகவும், மிகுந்த மரியாதையுடனும் இருக்கிறேன். உங்கள் அன்பான வார்த்தைகள் மற்றும் ஆசீர்வாதங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஜிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவை என்னை ஊக்கத்தாலும் மகிழ்ச்சியாலும் நிரப்புகின்றன. சினிமா கலைக்கும், எனது பயணத்தை ஒளிரச் செய்த அனைவருக்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து