முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி விளையாட கவாஸ்கர் வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2025      விளையாட்டு
Gavaskar 2023 06 09

Source: provided

புதுடெல்லி : சர்வதேச ஒருநாள் போட்டி இல்லாத நேரத்தில் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே கோப்பையில் (உள்ளூர் 50 ஓவர் போட்டி) ரோகித், விராட் கோலி விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

ரோகித் நீக்கம்...

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 19-ந் தேதி பெர்த்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா ஒரு வீரராக அணியில் நீடிக்கிறார். விராட் கோலியும் ஒருநாள் போட்டி அணியில் அங்கம் வகிக்கிறார்.

இந்திய அணி தோல்வி...

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இது ஜிம்பாப்வே அல்லது வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டி என்றால் நிச்சயம் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் விளையாட முன்வந்து இருக்கமாட்டார்கள். ஆனால் இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர். 50 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இதே ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த தொடரில் ஆட வேண்டும் என்று அவர்கள் விரும்பியிருக்கலாம்.

தயாராவது எளிதல்ல...

விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் 2027-ம் ஆண்டு நடக்கும் ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடுவார்களா? என்று கேட்கிறீர்கள். அது இந்திய அணி அடுத்த 2 ஆண்டுகளில் எத்தனை ஒரு நாள் போட்டிகளில் ஆடப்போகிறது என்பதை பொறுத்தே உள்ளது. ஏனெனில் ஒரு ஆண்டில் வெறும் 7 அல்லது 8 ஒருநாள் போட்டியில் விளையாடி விட்டு உலகக் கோப்பை போன்ற பெரிய தொடருக்கு தயாராவது எளிதல்ல.

விளையாட வேண்டும்...

அவர்கள் இருவரும் சர்வதேச ஒருநாள் போட்டி இல்லாத நேரத்தில் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே கோப்பையில் (உள்ளூர் 50 ஓவர் போட்டி) விளையாட வேண்டும். இது தான் அவர்கள் சீரான உடல்தகுதியுடன் இருப்பதற்கும், போட்டிக்கான பயிற்சியுடன் இருப்பதற்கும் ஒரே வழி. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து