எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பா.ஜ.க.வின் பகல்கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், “2026-ல் நடக்க இருக்கும் தேர்தல் தனித் தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் தி.மு.க. ஆட்சியா அல்லது டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என தீர்மானிக்கும் தேர்தல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகளுக்கான ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ பயிற்சிக்கூட்டத்தில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது:- உங்களுடைய உழைப்பால், 6-வது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாம், அடுத்து ஏழாவது முறையும் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்குத் தான் இந்தப் பயிற்சிக் கூட்டம். அதிலும், 2019-ம் ஆண்டு முதல், நாம் எதிர்கொண்ட அத்தனை தேர்தல்களிலும், மகத்தான வெற்றிகளை பெற்று வருகிறோம். நம்முடைய வெற்றிகள், நம்முடைய எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம். அன்றைக்கு தலைப்புச் செய்தி என்ன என்றால், “திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது.”. தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் சொல்கிறேன்.
திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும், கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் சென்று சேர்ந்திருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தையும் தொழில் துறையில் மிகப்பெரிய பாய்ச்சலையும். இந்தியாவில் எந்த மாநில அரசும் நம்முடைய அளவிற்கு சாதனைகள் செய்திருக்க மாட்டார்கள். மீதமிருக்கும் சில வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவோம். நம்முடைய அரசு செய்த சாதனைகளால் தான் நம்மால் தைரியமாக அனைவர் வீட்டுற்கும் சென்று, ஆதரவு கேட்க முடிகிறது.
மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கு செய்து கொண்டிருக்கும் துரோகங்களை, நிதி ஒதுக்கீடுகளில் செய்து கொண்டிருக்கும் வஞ்சகங்களை எடுத்துச் சொல்லி, ‘தமிழ்நாடு போராடும் - தமிழ்நாடு வெல்லும்’ என்று தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, இந்த மாபெரும் முன்னெடுப்பை வெற்றியடைய வைத்த, தி.மு.க. தொண்டர்களுக்கு, இந்த மேடையில் இருந்து, என்னுடைய பாராட்டுகளை, சல்யூட் மூலமாக சொல்லிக் கொள்கிறேன்.
பெரியாரும் அண்ணாவும் கருணாநிதியும் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வால்தான், பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு அடிபணியாமல் முதுகெலும்போடு எதிர்த்து நிற்கிறோம். எதிர்த்து நிற்பது மட்டுமல்ல; விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்தது மாதிரியான பல போராட்டங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். இப்போது கூட, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக, பல்வேறு மாநில முதல்வர்களை ஒன்றிணைத்தோம். அகில இந்திய மருத்துவப் படிப்பு ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைக்காக போராடி வாதாடி வெற்றி பெற்றோம். இதையெல்லாம் பார்த்துதான், பா.ஜ.க.வுக்கு நம் மீது கோபம் வருகிறது. அதனால்தான், பல்வேறு சூழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலைமையில்தான், அடுத்த கட்டமாக, நமக்கு காத்திருக்கும் பணிகள் என்ன? அதை எப்படியெல்லாம் செய்ய வேண்டும்? தலைமை முதல் தொண்டர்கள் வரை எப்படி ஒருங்கிணைந்து ஒரே இலக்குடன் செயல்பட வேண்டும்? என்று விவாதித்து, அதை களத்தில் செயல்படுத்துவதற்காகத் தான், இந்தப் பயிற்சிக் கூட்டம். தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், பாராளுமன்ற மாநிலங்களவை மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகச் செயலாளர்கள் என்று அனைவரும் பங்கேற்றுள்ளனர். உங்கள் அனைவரையும் ஒன்றாக பார்க்கும்போது, உதயசூரியனைப் பார்க்கிறேன். அதனைத் தமிழ்நாட்டு மக்களின் இதயசூரியனாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் இருக்கிறது.
இந்தப் பயிற்சி கூட்டத்துக்குப் பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் முகவர்கள், உறுப்பினர்கள் குழு, டிஜிட்டல் ஏஜென்ட், இளைஞர் அணி, மகளிரணி, பாகத்திற்குட்பட்ட கிளை, வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து ‘என் வாக்குச்சாவடி - வெற்றி வாக்குச்சாவடி’ திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். 2026ல் நடக்க இருக்கும் ஜனநாயகத் தேர்தல், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். தனித் தன்மையோடு தலைநிமிர்ந்து நிற்கும் நம்முடைய ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா? என்று தீர்மானிக்கும் தேர்தல். தமிழ்நாட்டின் சுய மரியாதையையும் தனித்தன்மையையும் காப்பாற்றப் போகும் தேர்தல்.
தமிழ்நாட்டை அழிக்க, இன எதிரிகளும் தமிழ்த் துரோகிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகிறார்கள். இவர்களை வீழ்த்தி, நம்முடைய மண், மொழி, மானத்தை காக்க வேண்டும். அதற்காகத்தான் தி.மு.க. கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
பா.ஜ.க.வின் பகல் கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும்வரை நிறைவேறாது. அவர்களுக்கும் அது நன்றாகத் தெரியும். ஆனாலும், புதிது புதிதாக குறுக்கு வழிகளைத் தேடுகிறார்கள். எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தமிழ்நாட்டில் அடுத்த வாரத்தில் நடைமுறைப் படுத்த இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதைக் காண்பித்து மிரட்டுகிறார்கள். இதற்கெல்லாம் நாம் பணிய மாட்டோம். இங்கு அவர்களின் ஆர்.எஸ்.எஸ். பாச்சா எதுவும் பலிக்காது.
சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பீகார் மாநிலத்தில் 65 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாக்கு உரிமையை, இதே சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் தேர்தல் ஆணையம் பறித்திருக்கிறது. இதை தொடக்கத்திலேயே நாம் கண்டித்தோம். தமிழ்நாட்டிலும் அதே குறுக்கு வழியைப் பயன்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தனது கைப்பாவையாக தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த முயற்சி செய்கிறது என்று அப்போதே சொன்னேன்.
உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை எஸ்.ஐ.ஆர். மூலமாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால், பா.ஜ.க.வும் அதன் கூட்டாளியான அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுவிடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். அதாவது, நேரடியாக தேர்தல் களத்தில் மக்களைச் சந்திக்கும் தெம்போ திராணியோ இல்லாதவர்கள், மக்களின் வாக்கு உரிமையை பறித்துட்டு வெற்றி பெறலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள்.
எஸ்.ஐ.ஆர். முறையை கைவிட வேண்டும் என்பதையும் வாக்காளர் பட்டியலைச் சீர்ப்படுத்த வேண்டும் என்றால், அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி, கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்பதையும் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாகவே தி.மு.க. வலியுறுத்தி இருக்கிறது. அதையும் மீறி முன்னெடுக்கப்படும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்ட ரீதியாக எதிர்கொள்வது மட்டுமல்ல, மக்களுடன் நின்று களத்திலும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு, இன்னும் சொல்லப்போனால், நமக்கு மட்டும்தான் உண்டு. மக்களின் வாக்கு உரிமையையே பறிக்கத் துணியும் எஸ்.ஐ.ஆர். செயல்பாட்டை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். உண்மையான வாக்காளர் அனைவரும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது உங்களுடைய பொறுப்பு.
எதிர்க்கட்சியான அதி.மு.க., தன்னுடைய சொந்தக் கட்சியின் உரிமைகளையே பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்ட நிலையில், மக்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்பட அதற்கு நேரமிருக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மக்களின் உரிமைகளைக் காக்க வேண்டியவர்கள் தி.மு.க.வினரும் தோழமைக் கட்சியினரும் தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மக்கள் நலனையும் மாநில உரிமைகளையும் காக்கும், தி.மு.க. ஆட்சியில் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்று நான் உறுதி அளிக்கிறேன். தலைகுனிய விடமாட்டார்கள் தி.மு.க. தொண்டகள் என்று அதன் தலைவர் என்ற முறையில் உறுதி ஏற்கிறேன்.
2021 தேர்தல், தமிழ்நாட்டை கொத்தடிமை அதி.மு.க. கூட்டத்திடம் இருந்து மீட்ட தேர்தல். 2026 தேர்தல் என்பது, தமிழ்நாட்டை பா.ஜ.க.- அதி.மு.க. கும்பலிடம் இருந்து பாதுகாப்பதற்கான தேர்தல். ஐந்தாண்டு காலம் வளப்படுத்தப் பட்ட தமிழ்நாட்டை கபளீகரம் செய்து நாசம் செய்ய திட்டமிடும் கூட்டத்தை, வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தியாக வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி, பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த அந்தக் கட்சியை, அமித்ஷாவிடம் விழுந்து சரண்டர் செய்துவிட்டார். அந்தக் கூட்டணியை தமிழ்நாட்டு மக்களும் விரும்பவில்லை. அவர்களது கட்சிக்காரர்களும் விரும்பவில்லை. மற்ற கட்சியினரும் அந்தக் கூட்டணிக்கு செல்லவில்லை. வி.சி.க. வருகிறார்கள், கம்யூனிஸ்ட்டுகள் வருகிறார்கள், காங்கிரஸ் வருகிறார்கள் என்று அவரும் தினமும் சொல்லிப் பார்த்தார். ஆனால், யாரும் அங்கு செல்லவில்லை. மக்களும் அவர் பேசுவதை நம்பத் தயாராக இல்லை.
தமிழ்நாட்டுக்கு எதிராக கூட்டணி அமைத்திருக்கும் அவருடைய சந்தர்ப்பவாதத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று, அதை நம்முடைய கூட்டணிக்கான வாக்குகளாக மாற்ற வேண்டும். அந்தக் கடமையும் பொறுப்பும் உங்களுக்குத் தான் இருக்கிறது. தி.மு.க. ஏழாவது முறையும் ஏற்றமிகு ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி, தி.மு.க.வுக்குத் தான் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும். கருணாநிதியின் தொண்டர்கள், நினைத்ததை செய்து காட்டுவார்கள் என்று புரிய வைக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஒரே நாளில் தங்கம் விலை ரூ.3,000 சரிவு
28 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,000 சரிந்து விற்பனையானது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி பயணம்
28 Oct 2025சென்னை : அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி செல்கிறார். பின்னர் நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துக்கொள்கிறார்.
-
காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் விஜய்யை நேரில் சந்தித்த பின் தகவல்
28 Oct 2025சென்னை : கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர்.
-
நீடாமங்கலத்தில் மத்தியக் குழு ஆய்வு: நெல் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை
28 Oct 2025நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் நேற்று (அக்.
-
6 நாட்களுக்குப் பிறகு ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி
28 Oct 2025தருமபுரி : காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக சரிந்துள்ளதால், 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பய
-
ஓரணியில் நின்று வாக்குரிமை பறிப்பை நாம் தடுப்போம் : துணை முதல்வர் உதயநிதி பதிவு
28 Oct 2025சென்னை : வரும் 2026 தேர்தலில் 68,000 வாக்குச்சாவடியிலும் வெற்றி என்ற புதிய வரலாறு படைப்போம் என தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஓரணியில் நின்று அநியாய வாக்
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
நெல் கொள்முதல் விவகாரம்: தமிழக அரசுக்கு விஜய் கேள்வி
28 Oct 2025சென்னை : உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாதது ஏன்? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள த.வெ.க.
-
களப்பணியில் வெல்ல வேண்டிய தருணம் இது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
28 Oct 2025சென்னை : களப்பணியில் தி.மு.க. தொண்டர்களை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு: தமிழ்நாடு அரசு தகவல்
28 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை எதிரொலி காரணமாக 6 நாட்களில் 4.12 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
முன்னாள் நீதிபதி தலைமையில் 8-வது ஊதியக்குழு அமைப்பு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
28 Oct 2025புதுதில்லி : சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்படுவது மற்றும் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி த
-
6.1 ரிக்டர் அளவில் துருக்கியில் நிலநடுக்கம்
28 Oct 2025அங்காரா : துருக்கி நாட்டில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மேற்கு மாகாணங்களில் உள்ள முக்கிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
விவசாயம் மற்றும் தொழில்துறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் : துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
28 Oct 2025கோவை : விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் என்று தெரிவித்துள்ள துணை ஜனாதிபதி சி.பி.
-
உடான் திட்டத்தின்கீழ் இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானங்களை தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம்
28 Oct 2025மாஸ்கோ : இந்தியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் தயாரிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
சென்னையில் இன்று முதல் மழை குறையும்
28 Oct 2025சென்னை : சென்னையில் இன்று முதல் மழை குறைந்துள்ளதாக வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார்.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை பா.ஜ.க.வின் பகல் கனவு நிறைவேறாது : மாமல்லபுரம் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
28 Oct 2025சென்னை : தமிழ்நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கும் பா.ஜ.க.வின் பகல்கனவு, தி.மு.க. இந்த மண்ணில் இருக்கும் வரை நிறைவேறாது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.


