முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - தெ.ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று தொடக்கம்

வியாழக்கிழமை, 13 நவம்பர் 2025      விளையாட்டு
13-Ram-90

Source: provided

கொல்கத்தா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் 

இன்று தொடங்குகிறது.

தீவிர பயிற்சியில்... 

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இப்போட்டி நடைபெறவுள்ளதால், இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

நிதிஷ் விடுவிப்பு...

இந்த நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி விடுவிக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னாப்பிரிக்க ஏ அணியுடன் விளையாடும் இந்திய ஏ அணியில் நிதிஷ் குமார் ரெட்டி இடம் பெற்றுள்ளார்.

2-வது போட்டியில்... 

இதன் காரணமாக அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளது. இருப்பினும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு மாற்று வீரர் யாரையும் பி.சி.சி.ஐ. தேர்வு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் முதல் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி மஅணியில் இணைவார் என்பதையும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

துருவ் ஜூரெலுக்கு...

இதன் மூலம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் துருவ் ஜூரெல் இடம் பிடிப்பதற்காக வாய்ப்பானது அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பந்த் இடம் பெறாததன் காரணமாக, துருவ் ஜூரெல் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால் இத்தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த் மீண்டு அணிக்கு திரும்பியுள்ளதால், பிளேயிங் லெவனில் துருவ் ஜூரெலின் இடம் கேள்விக்குறியானது.

மிக முக்கியம்...

இந்த நிலையில் இந்த போட்டி குறித்து செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய அணி கேப்டன் கில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த இரண்டு போட்டிகளும் எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நாங்கள் விளையாட வேண்டும் என்றால் இந்த போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அவர்கள் பலமானவர்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர்கள். எனவே அவர்களை வீழ்த்துவது என்பது எளிதான காரியமாக இருக்காது.

பல சவால்கள்... 

இந்த டெஸ்ட் போட்டியில் பல சவால்கள் இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால் ஒரே அணியாக நாங்கள் இந்த சூழலை பெரிதாக கையாளும் என்று நம்புகிறேன். ஆசிய கண்டங்களில் உள்ள ஆடுகளங்களில் தென் ஆப்பிரிக்கா போன்ற அணியை எதிர்கொள்வது என்பது எப்போதுமே கடினமான விஷயம். ஆனால் இந்த சவாலை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்.என்று கூறினார்.

இந்திய டெஸ்ட் அணி: 

ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப்.

தெ.ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: 

டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டெவால்ட் பிரேவிஸ், டோனி டி ஸோர்ஸி, ஜுபைர் ஹம்சா, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, காகிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரைன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து